Author: Menaka Mookandi

  • சுவிட்சர்லாந்தில் இருந்து இஸ்ரேல் பறந்த விமானத்தில் இடம்பெற்ற அசம்பாவிதம்.!

    சுவிட்சர்லாந்தில் இருந்து இஸ்ரேல் பறந்த விமானத்தில் இடம்பெற்ற அசம்பாவிதம்.!

    டெல் அவிவ் செல்லும் சுவிஸ் விமானம் ஒரு பழுதடைந்த பவர் பேங்க் காரணமாக ஏதென்ஸில் திட்டமிடப்படாத தரையிறக்கத்தை மேற்கொண்டது. பிப்ரவரி 1 முதல், சூரிச் மற்றும் டெல் அவிவ் இடையே அதன் வழக்கமான விமான சேவையை சுவிஸ் ஏர் மீண்டும் தொடங்கியது. இருப்பினும், பிப்ரவரி 6, வியாழக்கிழமை, இந்த பாதையில் திட்டமிடப்பட்ட விமானம் திட்டமிட்டபடி அதன் இலக்கை அடையவில்லை. அதற்கு பதிலாக, HB-JDH என பதிவுசெய்யப்பட்ட ஏர்பஸ் A320 நியோ, ஏதென்ஸில் திட்டமிடப்படாத தரையிறக்கத்தை மேற்கொள்ள வேண்டிய…

  • இன்றும் நாளையும் ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு

    இன்றும் நாளையும் ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு

    தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு மின் விநியோகம் தடை செய்யப்பட வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அந்த சபை அறிவித்துள்ளது. அதன்படி, இந்த மின் வெட்டு பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணிக்கு இடையில் நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டவுள்ளது. நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையம் மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படும் வரை இந்த மின்வெட்டை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.…

  • பதில் அமைச்சர்கள் நால்வர் நியமனம்

    பதில் அமைச்சர்கள் நால்வர் நியமனம்

    2025 ஆம் ஆண்டு உலக அரசுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம் செய்துள்ளதை அடுத்து, 04 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் கீழ் உள்ள மூன்று அமைச்சுகளான டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுடன் விஜயத்தில் இணைந்துள்ள அமைச்சர் விஜித ஹேரத்தின் கீழ் உள்ள வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு ஆகியவற்றுக்கும் பின்வரும் பதில்…

  • கட்டுநாயக்க விமான நிலையத்தில் தோட்ட மீட்பு

    கட்டுநாயக்க விமான நிலையத்தில் தோட்ட மீட்பு

    கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் உள்ள பயண பொதிகள் பகுதிக்கு அருகில் 9 மி.மீ தோட்டா ஒன்று மீட்கப்பட்டுள்ளது. சிறிலங்கன் தரை உதவி பணிப்பெண்ணால் இது அவதானிக்கப்பட்டு, மேலதிக விசாரணைக்காக இன்று (10) அதிகாலை விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், தோட்டாவை அவதானித்த சிறிலங்கன் தரை உதவி பணிப்பெண்ணிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். இந்த தோட்டாவை மேலதிக விசாரணைக்காக இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

  • யாழ் நகரில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று 80 இலட்சம் ரூபா பணம் அபகரிப்பு!

    யாழ் நகரில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று 80 இலட்சம் ரூபா பணம் அபகரிப்பு!

    யாழ் நகரில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று 80 இலட்சம் ரூபா பணம் அபகரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவு பொலிஸாரால் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.வெளிநாடு செல்வதற்கு ஆர்வமாகவிருந்த இளைஞரொருவரிடம் 80 இலட்சம் ரூபா வரையான பணத்தை வங்கியில் வைப்பிலிட்டு வங்கி அறிக்கையை நேரடியாக வந்து தமக்கு காட்டுமாறு வெளிநாட்டு முகவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனை நம்பி சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதிக்குச்…

  • ஹிருணிகாவிற்கு பிடியாணை!

    ஹிருணிகாவிற்கு பிடியாணை!

    2022 ஆம் ஆண்டு கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பான முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதிமன்றத்தில் ஆஜராகாத ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட பல சந்தேக நபர்களைக் கைது செய்து ஆஜர்படுத்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (10) பிடியாணை பிறப்பித்துள்ளது. இக் குறித்த முறைப்பாடு இன்று கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அந் நேரத்தில், இந்த முறைப்பாட்டில் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட பலர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை

  • ஜனாதிபதி அநுரகுமார ஐக்கிய அரபு இராஜ்ஜியம் விஜயம்!

    ஜனாதிபதி அநுரகுமார ஐக்கிய அரபு இராஜ்ஜியம் விஜயம்!

    இந்த ஆண்டுக்கான உலக அரசுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்றைய தினம் (10) ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு பயணிக்கிறார். ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயிட் அல் நஹியாவின் அழைப்பிற்கிணங்க ஜனாதிபதியின் இந்த விஜயம் அமையவுள்ளது. இவ் விஜயத்தின் போது இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதுடன், ஐக்கிய அரபு இராச்சியத்தின் துணைத் தலைவரும், பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமையும் சந்திக்க உள்ளார். மேலும், மாநாட்டில் பங்கேற்கும்…

  • பாராளுமன்ற உறுப்பினர் அருச்சுனா பதவி விலக வேண்டும்!

    பாராளுமன்ற உறுப்பினர் அருச்சுனா பதவி விலக வேண்டும்!

    பாராளுமன்றத்தில் அமைச்சர் சந்திரசேகரன் அவர்களைப் பாரத்து… ‘கப்பல்’ என்றான சொல்லாடல்களைப் பாவித்து பேசிய வார்த்தைகளுக்காக…மக்களால் தெரிவு செய்யப்பட் பாராளுமன்ற உறுப்பினர் தாமாக பதவி விலகவேண்டும் அன்றேல் மக்களால் பதவி விலக வைக்கப்பட வேண்டும். இது, அதிலும் சிறப்பாக அவரின் தெரிவிற்கு காரணமான விருப்பு வாக்குளை வழங்கியவர்களால்.இதனை ஒரு பொதுவெளி அறை கூவலாக முன் வைக்கின்றேன்.பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சர் மலையக மக்கள் மத்தியில் இருந்து மிகவும் விளிம்பு நிலையில் இருந்து தான் நம்பும் சித்தாந்தத்தின் அடிப்படையில் சமூகசேவை செயற்பாட்டாளராகி…

  • சிம்புவின் புதிய படத்தில் சாய் பல்லவி தான் கதாநாயகியா!

    சிம்புவின் புதிய படத்தில் சாய் பல்லவி தான் கதாநாயகியா!

    கொரோனா காலத்தை பயன்படுத்தி தனது உடல்எடை குறைத்து ஆளே மாறிய சிம்பு அதன்பின் நிறைய வெற்றிப்படங்களை கொடுத்தார்.மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என நிறைய ஹாட்ரிக் வெற்றிகள் வெளியான நிலையில் கடந்த இரு ஆண்டுகளாக அவரது படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. தற்போது தல் லைஃப் படத்தில் முக்கிய ரோலில் சிம்பு நடித்துள்ள நிலையில் அவரது புதிய படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.நடிகர் சிம்புவின் 49வது படத்தை பார்க்கிங் படத்தை இயக்கிய ராம்குமார் இயக்க…

  • புகையை சுவாசித்த நால்வர் வைத்தியசாலையில் அனுமதி!

    புகையை சுவாசித்த நால்வர் வைத்தியசாலையில் அனுமதி!

    பொகவந்தலாவ பகுதியில் மின்பிறப்பாக்கியில் (ஜெனரேட்டர்) இருந்து வந்த புகையை சுவாசித்ததில் நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (09) முற்பகல் ஏற்பட்ட மின் தடை காரணமாக, பொகவந்தலாவ பகுதியில் உள்ள சில்லறை விற்பனைக் கடைக்குள் ஒரு மின்பிறப்பாக்கி (ஜெனரேட்டர்)  இயக்கப்பட்டுள்ளது. மின்பிறப்பாக்கியிலிருந்து வந்த புகையை சுவாசித்ததில் கடையில் இருந்த நான்கு ஊழியர்கள் திடீர் சுகயீனமுற்று பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஊழியர்களில் ஒரு ஆண் மற்றும் மூன்று பெண்கள் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் 25 முதல்…