Author: Menaka Mookandi
-
நுரைச்சோலை மின் நிலையம் எப்போது இயல்பு நிலைக்கு திரும்பும்?
நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை 4 நாட்களில் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மேலும் அதன்படி, பெப்ரவரி 14 ஆம் திகதியளவில் தேசிய மின் கட்டமைப்புடன் சேர்க்க எதிர்பார்ப்பதாக மின்சார சபையின் பொறியாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்தார்.
-
புதிய வரிகளுடன் புதிய டொயோட்டா விலைகள் இதோ…!
அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வரிகளின் மூலம் டொயோட்டா லங்கா தனது வாகனங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்ய எதிர்பார்க்கும் விலைகளை அறிவித்துள்ளது.வாகனத்தின் ஆரம்ப விலை பின்வருமாறு. • Lite Ace: Rs. 7.45 million • Wigo: Rs. 9.15 million •Lite Ace Van : Rs. 11.4 million • Raize: Rs. 12.25 million • Hilux (Single Cab) : Rs. 15.2 million • Hiace: Rs. 19.95 million…
-
நாட்டிற்கு இலட்சக்கணக்கில் வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள்!
2025 ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 332,439 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை சமீபத்திய தரவு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் பிப்ரவரி மாதத்தின் முதல் 9 நாட்களில் மொத்தம் 79,678 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்,பிப்ரவரி மாதத்தின் முதல் 9 நாட்களில் அதிக சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இலங்கையர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அனுப்ப எதிர்பாரப்பு..!
2025 ஆம் ஆண்டில் 340,000 இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக அனுப்ப எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கு தௌிவூட்டுவதற்காக தொடர் நிகழ்ச்சித் திட்டங்களின் முதலாவது நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய அதன் தலைவர் கோசல விக்ரமசிங்க இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். மேலும் 2024 ஆம் ஆண்டில், சுமார் 314,000 இலங்கையர்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் சென்றனர்.அதன்படி, 2024 ஆம் ஆண்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர் பணம் அனுப்புதலில் 6.51 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டதாக…
-
யோஷிதவின் டெய்சி பாட்டிக்கு வெளிநாட்டு பயணத்தடை!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித்த ராஜபக்சவின் பாட்டி டெய்சி பொரெஸ்ட் விக்கிரமசிங்கவிற்கு (Daisy Forrest) கடுவலை நீதவான் நீதிமன்றம் வெளிநாட்டு பயணத்தடையை விதித்துள்ளது. மேலும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.டெய்சி பொரெஸ்ட் விக்கிரமசிங்கவிற்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பில் சந்தேக நபர் என குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டமா அதிபரின் உத்தரவின் பேரிலேயே இந்த குற்றசாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
-
மாஸ்டர் இன்வெஸ்ட்மென்ட் குழுமத்தின் CEO – ஜனாதிபதி சந்திப்பு..!
ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு 3 நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நேற்று (10) பிற்பகல் துபாயில் உள்ள ஜுமேரா பீச் ஹோட்டலில் மாஸ்டர் இன்வெஸ்ட்மென்ட் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், ராஸ் அல் கைமா ஆட்சியாளரின் மருமகனுமான ஷேக் அப்துல்லா பின் முஹம்மது அல் காசிமியை சந்தித்தார். இலங்கைக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையிலான பொருளாதார மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.
-
கனடாவை அமெரிக்காவுடன் இணைக்காமல் விடமாட்டேன்-டிரம்ப் பிடிவாதம்
கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாற்றவேண்டும் என்பது குறித்து தான் தீவிர ஆர்வம் கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கனடாவை அமெரிக்காவை இணைப்பது குறித்து அவர் தெரிவித்துவரும் விடயங்கள் உண்மையா என்ற பொக்ஸ் நியுஸ் செய்தியாளரின் கேள்விக்கே ஆம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். நாங்கள் வருடாந்தம் 200 பில்லியன்டொலரை கனடாவிடம் இழக்கின்றோம் என தெரிவித்துள்ள டிரம்ப் அது தொடர்வதற்கு அனுமதிக்கப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார். அதேவேளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உண்மையாகவே கனடாவை அமெரிக்காவுடன்…
-
கனடிய பிரதமர் பிரான்சுக்கு விஜயம்!
கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பிரான்சிக்கு விஜயம் செய்துள்ளார். செயற்கை நுண்ணறிவு குறித்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் பிரான்சிற்கு விஜயம் செய்துள்ளார். சர்வதேச செயற்கை நுண்ணறிவு குறித்த மாநாடு பிரான்சின் பாரிஸ் நகரில் நடைபெறுகின்றது. அமெரிக்க அரசாங்கம் கனடாவின் உலோக உற்பத்திகள் மீது 25 வீத வரி விதிக்கப்படக்கூடிய சூழ்நிலையில் இந்த விஜயம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவின் தாக்கங்கள்…
-
பங்குச் சந்தையில் பாரிய வீழ்ச்சி!
இந்த வாரத்தின் தொடக்க வர்த்தக நாளான இன்று (10) கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்ணில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 168.41 புள்ளிகள் குறைந்து 16,566.27 புள்ளிகளாகவும், S&P SL20 சுட்டெண் 32.69 புள்ளிகள் குறைந்து 4,959.45 புள்ளிகளாகவும் பதிவாகியுள்ளன. அனைத்து பங்கு விலைக் சுட்டெண்ணில் ஏற்பட்ட சரிவுக்கு, செலிங்கோ ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் பங்கு விலையில் ஏற்பட்ட 5.98% சரிவு மற்றும் LOLC ஹோல்டிங்ஸ், ஜோன் கீல்ஸ்…
-
கனடாவில் இடம்பெறும் பாரிய மோசடி
கனடாவின் யோர்க் பிராந்தியத்தில் பாரியளவு மோசடி இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதியவர்களை ஏமாற்றி பண மோசடிகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. யோர்க் பிராந்திய பொலிஸார் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இந்த ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரையில் இந்த மோசடிகளினால் 19000 டொலர்கள் மோசடி செய்யப்பட்டுள்ளன. தொலைபேசி வழியாகவே அதிகளவான மோசடிகள் இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பேரப்பிள்ளைகள் போன்று பேசி தங்களுக்கு ஆபத்து எனக் கூறி முதியவர்கள் ஏமாற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.