Author: Menaka Mookandi
-
கனடிய தேசிய கொடிகள் விற்பனையில் அதிகரிப்பு
கனடாவின் தேசியக்கொடி விற்பனையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மைய நாட்களாக உலக அரங்கில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் காரணமாக இவ்வாறு கனடாவின் தேசியக்கொடிகளின் விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கல்கரியை மையமாகக் கொண்டு இயங்கி வரும் நிறுவனம் ஒன்று இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. அமெரிக்கா, கனடா மீது பிரயோகித்து வரும் அழுத்தங்கள் காரணமாக இந்த தேசப்பற்று உந்துதல் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப், கனடாவை அமெரிக்க மாநிலமாக இணைத்துக்கொள்ள போவதாக எச்சரித்துள்ளார். மேலும் பல்வேறு வரி…
-
குரங்குகளை பிடித்து தீவு ஒன்றிற்கு அனுப்பும் திட்டம் ஆரம்பம்!
குரங்குகளை பிடிக்கும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் இவ்வாறு பிடிக்கப்படும் குரங்குகளை ஒர் தீவிற்கு கொண்டு போவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதற்காக ஓர் தீவு அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இந்த திட்டம் பரீட்சார்த்த அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.குரங்குகளை பிடிக்கும் இந்த பரீட்சார்த்த முயற்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்னவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.குரங்குகளினால் பயிர்ச் செய்கைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம்…
-
அமெரிக்க வரி விதிப்பு குறித்து ஒன்றாரியோ மக்கள் கவலை
அமெரிக்க வரி விதிப்பு தொடர்பில் ஒன்றாரியோ மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.ஒன்றாரியோவைச் சேர்ந்த 76 வீதமானவர்கள் அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பில் கவலை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நனோஸ் ஆய்வு நிறுவனம் இது தொடர்பிலான கருத்துக் கணிப்பினை முன்னெடுத்துள்ளது. சுமார் ஆயிரம் ஒன்றாரியோ பிரஜைகளிடம் இந்த கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கனடாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் உருக்கு மற்றும் அலுமினிய உற்பத்திகளுக்கு 25 வீத வரி விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
யூடியூப் சனலுக்கு எதிராக சுஜீவ முறைப்பாடு
தன்னைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்பியதாகக் கூறி, யூடியூப் சேனல் ஒன்றுக்கு எதிராக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க, நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முறைப்பாடு அளித்துள்ளார். சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட ஒருவரால் நடத்தப்படும் யூடியூப் சேனல், தனக்கு எதிராக அவதூறான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும், தனது தனிப்பட்ட தகவல்களை வெளியிட்டதாகவும் மனுதாரர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்தப் முறபைபாட்டில் யூடியூப்பின் தாய் நிறுவனமான கூகிளையும் பிரதிவாதியாகக் குறிப்பிட்டு, இந்த வழக்கில் யூடியூப் நிறுவனம் இணைய…
-
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கட்டுப்பாட்டில்
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும், புத்தாண்டு காலத்தில் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களைத் தொடர்ச்சியாக விநியோகிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதை உறுதி செய்வதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது. வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் ஜனாதிபதி அலுவலகத்தில்…
-
குவைத் பிரதமருடன் ஜனாதிபதி சந்திப்பு
குவைத் பிரதமர் ஷேக் அஹமட் அப்துல்லா அல் அஹமட் அல் சபா மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பு 2025 உலக உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஐக்கிய அரபு இராச்சியம் சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் குவைத் பிரதமர் ஷேக் அஹமட் அப்துல்லா அல் அஹமட் அல் சபாவிற்கும் இடையிலான சந்திப்பொன்று செவ்வாய்க்கிழமை (11) பிற்பகல் இடம்பெற்றது. தற்போது இலங்கையின் அரசியல் மற்றும் நிதி ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், முதலீடு மற்றும் சுற்றுலாத்துறைக்கான சாத்தியங்கள்…
-
அமெரிக்காவை விட்டுவிட்டு வேறு நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் கனேடிய மக்கள்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் வரிவிதிப்பு மிரட்டல்களை, கனேடிய அரசியல்வாதிகளை விட அதிக சீரியஸாக கனேடிய மக்கள் எடுத்துக்கொண்டுள்ளதுபோல் தெரிகிறது. கனடா மீது கூடுதலாக 25 சதவிகித வரிகள், கனேடிய கார்கள் மீது 100 சதவிகித வரிகள் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிரட்டிக்கொண்டே இருக்கிறார். பதிலடி நடவடிக்கைகள் எடுக்க இருப்பதாக தெரிவித்தும், கனேடிய அரசு வரிகள் தொடர்பில் முழுமையான முடிவு எடுத்ததுபோல் தெரியவில்லை. ஆனால், மக்கள் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கத் தயாராகிவிட்டார்கள். கனடா மீது அமெரிக்கா வரிகள்…
-
தீவிரமான போர் தொடரும் என ஹமாஸுக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் மீண்டும் தீவிரமான போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹமாஸுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் ஒப்பந்தத்தை மீறியதாக ஹமாஸ் குற்றம் சுமத்தி, பணயக்கைதிகள் விடுதலையை மறு அறிவிப்பு வரை ஒத்திவைப்பதாக அறிவித்தது. இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில்,பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் மீண்டும் தீவிரமான போர் தொடரும் என கூறிய நெதன்யாகு காசாவிற்கு உள்ளேயும் வெளியேயும் இஸ்ரேலியப் படைகளை குவிக்க உத்தரவிட்டதாக தெரிவித்துள்ளார். மீதமுள்ள 76 பணயக்கைதிகளையும் விடுவிக்கக் கோருகிறாரா, அல்லது இந்த சனிக்கிழமை…
-
நாளுக்கு நாள் அதிகரிக்கும் தேங்காயின் விலை
நாட்டில் தேங்காயின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொழும்பு கோட்டையில் ஓரளவு பெரிய தேங்காய் ஒன்று 260 – 270 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுச் சந்தையில் நடுத்தர அளவிலான தேங்காய் ஒன்றின் விலை 240 – 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதுடன் அளவில் மிகவும் சிறிய தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை அதிகரிப்பு காரணமாக கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.
-
பிரதேச மக்கள் பொலிஸ் நிலையம் முன் ஆர்ப்பாட்டம்!
வாதுவ பொலிஸார் வாகன விபத்தில் கைது செய்யப்பட்ட ஒருவரை தாக்கி கொன்றதாகக் கூறி கிட்டத்தட்ட 40 பேர் பொலிஸாருக்கு முன்பாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நபர் வாதுவ தல்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் ஆர்.எம். சமித டில்ஷான் என்ற 24 வயதுடையவர் ஆவார். மேலும் அப்பாவி குழந்தைகளின் குடும்பங்கள் சீரழிகின்றன. சவப்பெட்டியை வாங்கக்கூட பணம் இல்லை எனக் கூறி போரட்டம் நடத்தியவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். இந்தநிலையில் வாதுவ பொலிஸாரின் பிரதான நுழைவாயில் வீதித் தடைகளினால்…