Author: Menaka Mookandi
-
தையிட்டி சட்ட விரோத விகாரைக்கு தீர்வு கிட்டாது: அடித்துக் கூறும் தமிழ் தரப்பு
தையிட்டி சட்டவிரோத விகாரை அகற்றப்பட வேண்டும் என்பது மதவாதமோ இனவாதமோ அல்ல இது தமிழ் மக்களின் அரசியல் சார்ந்த பிரச்சனை என பொதுவில் பொலிகண்டி அமைப்பின் இணைப்பாளர் வேலன் சுவாமிகள் (Velan Swamigal) தெரிவித்துள்ளார். வலி வடக்கு தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ விகாரையை அகற்றுமாறு கோரி இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வலி வடக்கு தையிட்டியில் தமிழ் மக்களின் காணிகளை அவர்களுக்கு தெரியாமல்…
-
எமது வாய்களை மூட வர வேண்டாம் : நாடாளுமன்றில் பொங்கியெழுந்த சஜித்
நாட்டில் ஏற்பட்ட மின்தடைக்கு இனிமேலும் குரங்குகள் மீது பழி போட வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். அத்துடன் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் கருத்து தெரிவிக்க எனக்கு சந்தர்ப்பம் தர வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார். இன்று (14) நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான பதில்களை நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. மின் துண்டிப்பு…
-
யாழ்ப்பாணத்தில் வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம்.
வேலை வாய்ப்பினை வழங்குமாறு கோரி வேலையில்லா பட்டதாரிகள் இன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த பட்டதாரிகள் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றையதினம் 2025ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவு வேலைத்திட்டம் தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்று வருகின்றது. அதில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டு…
-
எரிந்து நாசமாகும் அபாயத்தில் எல்ல சுற்றுலா வலயம்: மோசமாக பரவும் காட்டுத் தீ
சுற்றுலா நகரத்திற்கு அருகிலுள்ள எல்ல பாறை பகுதியில் ஏற்பட்ட தீ, தற்போது எல்ல மலைத்தொடர் முழுவதும் பரவும் அபாயத்தில் உள்ளது. தற்போது, பண்டாரவளை வன பாதுகாப்பு அதிகாரிகள், எல்ல பிரதேச செயலகம் மற்றும் தியத்தலாவை விமானப்படை மற்றும் இராணுவ அதிகாரிகள் தீயை அணைக்க கடுமையாக செயற்பட்டு வருகின்றனர். காற்றின் வேகம் மற்றும் செங்குத்தான சரிவுகள் காரணமாக தீயைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், வனவிலங்கு மண்டலத்திற்கு மேலே உள்ள வனப் பாதுகாப்பு மண்டலத்திற்குள் தீ…
-
யாழ். செம்மணியில் மனித புதைகுழி…! தொடர்ந்து மீட்கப்படும் எலும்புக் கூடுகளால் அச்சம்
யாழ்ப்பாணம் (Jaffna) – செம்மணிப் பகுதியில் அமைந்துள்ள அரியாலை சிந்துபாத் மயானத்தில் எலும்புக் கூடுகள் மீட்கப்படுவது பல்வேறு சந்தேகங்களையும் அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது. இந்த மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் நேற்று வியாழக்கிழமை (13) கண்டெடுக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த மயானத்தில் நல்லூர் பிரதேச சபையினால் மின்தகன எரியூட்டி அமைப்பதற்கான பூர்வாங்க வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த மயானத்திற்குள் எரியூட்டி அமைப்பதற்காக நல்லூர் பிரதேச சபையினால் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய எரியூட்டி அமைப்பதற்காக கிடங்கு வெட்டிய போது மண்டையோடு உட்பட்ட…
-
யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் உட்பட மூவருக்கு எதிராக வழக்கு
யாழ்ப்பாண பல்கலைக்கழக (University of Jaffna) துணைவேந்தர் உட்பட மூவருக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பல்கலைக் கழகத் துணைவேந்தர் சிறிசற்குணராஜா, கலைப்பீடாதிபதி பேராசிரியர் எஸ்.ரகுராம், மாணவர் ஒழுக்காற்று அதிகாரி ஆகியோருக்கு எதிராக குறித்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழக 4ஆம் வருட சட்டத்துறை மாணவன் சி.சிவகஜன் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கு.குருபரன் மனுவைத் தாக்கல் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து மேலும்…
-
அதிகப்படியான வங்கி கடன் கட்ட முடியாமல் தவிக்கும் பிரான்ஸ் மக்கள்!
பிரான்ஸில் அதிகப்படியான வங்கிக்கடன்களினால் சிக்குண்டுள்ள மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு பிரெஞ்சு மக்கள் கடன்காரர்களாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. Banque de France தெரிவித்த தகவல்களின் படி, 2024 ஆம் ஆண்டில் €4.5 பில்லியன் யூரோக்கள் கடன் மீளச் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் கிட்டத்தட்ட 600,000 பேர் அதிக கடன்களில் சிக்கித்தவித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு தொகையாவும், கடன்காரர்களின் எண்ணிக்கையாவும் இது…
-
டொரன்டோவில் கடும் பனிப்பொழிவு நிலை
கனடாவின் டொரன்டோவில் கடும் பனிப்பொழிவு நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவான மிக மோசமான பனிப்பொழிவு தற்போது நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அநேக பகுதிகளில் குறிப்பாக டொரன்டோ பெரும்பாகத்தில் கடுமையான பனிப்பொழிவு நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் 25 சென்டிமீட்டருக்கு மேல் பனிப்பொழிவு நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் போக்குவரத்திற்கும் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. கனடிய சுற்றாடல் திணைக்களம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் பின்னர் டொரன்டோவில் பதிவான…
-
புகழ்பெற்ற அருங்காட்சியகம் பிரான்சில் மூடப்பட்டது
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் புகழ்பெற்ற பாம்பிடோ மையம் (The Centre Pompidou) என்ற புகழ்பெற்ற அருங்காட்சியகம் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனித்துவமான கட்டிடக்கலைக்காகவும், அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஓவியங்கள், பழங்கால பொருட்களுக்காக பெருமை வாய்ந்த அருங்காட்சியகங்களில் ஒன்றாக இந்த பாம்பிடோ மையம் உள்ளது. 1977-ம் ஆண்டு இந்த அருங்காட்சியகம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. உள்நாட்டினர் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என ஆண்டுக்கு 32 லட்சம் பொதுமக்கள் இந்த அருங்காட்சியகத்திற்கு வந்து…
-
உக்ரைன் போர் குறித்து மும்முனை பேச்சுவார்த்தை
ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்பாக மும்முனை பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜேர்மனின் முனிச்சில் இன்று நடைபெறும் பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்க, ரஷ்ய மற்றும் உக்ரேனிய அதிகாரிகள் சந்தித்துக் கலந்துரையாடுவார்கள் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதன்படி உக்ரைனில் போரை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவது என்பது குறித்து இதன் போது பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் என்று ட்ரம்ப் கூறினார். அதேவேளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை…