Author: Menaka Mookandi
-
மீண்டும் மருத்துவமனையில் பிரான்சிஸ் பரிசுத்த பாப்பரசர் அனுமதி
சுகயீனம் காரணமாக பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் இன்று (14) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது. 88 வயதாகும் பரிசுத்த பாப்பரசர் கடந்த சில வாரங்களாக சுவாசிப்பதில் சிரமங்களை எதிர்கொண்டிருந்ததாகவும், இதன் காரணமாக தனது உரைகளை வாசிக்கும் பொறுப்பை அதிகாரிகளிடம் ஒப்படைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இன்று காலை ஆராதனை நிகழ்விற்குப் பிறகு அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவமனையில் அவருக்கான தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. வத்திக்கான் மருத்துவ அதிகாரிகள்…
-
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் மீண்டும் இயங்கும் நிலைக்கு திரும்பியது.
செயலிழந்திருந்த நுரைச்சோலை லக் விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் அனைத்து மின் உற்பத்தி இயந்திரங்களும் மீண்டும் இயங்கும் நிலைக்குத் திரும்பியுள்ளன. அதன்படி, தற்போது இரண்டு மின் பிறப்பாக்கிகள் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் மற்றைய மின் பிறப்பாக்கியைும் மின் கட்டமைப்புடன் இணைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
-
பணய கைதிகளை விடுவிப்பதில் காலதாமதம் ஏற்படும் கமாஸ் தெரிவிப்பு.
இஸ்ரேல் பணய கைதிகளை விடுவிப்பதில் காலதாமதம் ஏற்படும் என, ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது. அமெரிக்கா, எகிப்து மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் மேற்கொண்ட மத்தியஸ்த பேச்சுவார்த்தையின் பலனாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில் இஸ்ரேல் கைதிகள் மற்றும் பாலஸ்தீனிய கைதிகள் பரஸ்பரம் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் சமீபத்தில் நிருபர்களிடம் பேசிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், “காசாவில் பிடித்து வைக்கப்பட்டு உள்ள பணய கைதிகள் அனைவரும்…
-
இலஞ்சம் பெற்ற பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் கைது
ஹோட்டல் உரிமத்தைப் புதுப்பிக்க 200,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கலேவெல பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
-
பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைக்க நடவடிக்கை முன்னெடுப்பதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன அறிவித்தார்.
அமெரிக்காவின் யு.எஸ்.எய்ட். நிறுவனத்துடன் -இலங்கை தொடர்புபடுத்தப்படும் விவகாரம் குறித்து பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன அறிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான தயாசிறி ஜயசேகர; அமெரிக்காவின் யு.எஸ்.எய்ட் நிறுவனத்தின் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இலங்கையின் பெயரை குறிப்பிட்டு சர்வதேச மட்டத்தில் பலவிடயங்கள் பேசப்படுகின்றன. இவ்விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட தெரிவுக்குழு ஒன்றை அமைக்குமாறு நாமல் ராஜபக்ஷ உங்களுக்கு எம்.பி.உங்களுக்கு…
-
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சட்டமூல வழக்கை ஒரே நாளில் தீர்த்திருக்க முடியும் என தெரிவிப்பு
உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டமூலம் தொடர்பான வழக்கை ஒரே நாளில் தீர்த்திருக்க முடியும். ஆனால் சட்டமா அதிபர் திணைக்களத்தின் தாமதத்தினாலேயே தீர்ப்பு வெளியாவதற்கும் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை உள்ளூராட்த் தேர்தல் திருத்தச் சட்டம் தொடர்பில் உயர்நீதிமன்றத் தீர்ப்பை சபாநாயகர் அறிவித்த பின்னர் ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அதன்போது ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவிக்கையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் உள்ளடக்கத்தை…
-
ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை நிச்சயம் மீட்போம் என உக்ரைன் உறுதி
ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை தாம் நிச்சயம் மீட்போம் ”என நேட்டோ இராணுவக் கூட்டமைப்பிடம் உக்ரேன் உறுதியளித்துள்ளது. ரஷ்யா கைப்பற்றிய பகுதிகளை உக்ரேனால் இனி திரும்பப் பெற முடியாது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அண்மையில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட் ஹெக்செத் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்து. இந்நிலையில் குறித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் உக்ரேன் பாதுகாப்புத் துறை அமைச்சா் ருஸ்தம் உமெரொவ், நோட்டோ தலைவர் மார் க் ரூட்டை, நேட்டோ தலைமையகத்தில்…
-
கனடாவின் காலநிலை குறித்து வார இறுதியில் வெளியிடப்பட்ட எதிர்வுகூறல்
எதிர்வரும் வார இறுதி நாட்களில் கனடாவின் ரொறன்ரோவில் நிலவக்கூடிய காலநிலை குறித்து எதிர்வுகூறல் வெளியிடப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் ரொறன்ரோவில் சுமார் 30 சென்டிமீற்றர் வரையில் பனிப்பொழிவு நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. குறிப்பாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை மற்றும் மதிய வேளைகளில் சாரதிகள் மிகவும் அவதானத்துடன் வாகனங்களை செலுத்த வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
-
தபால் விநியோகம் கனடாவின் சில பகுதிகளில் இடைநிறுத்தம்
கனடாவின் சில பகுதிகளில் தபால் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக ஒன்றாரியோ மற்றும் கியுபெக் ஆகிய மாகாணங்களில் இவ்வாறு தபால் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கனடிய தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. பனிப்பொழிவு மற்றும் கடும் பனிப்புயல் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி தபால் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தபால்களை சேகரிப்பது மற்றும் விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் காலநிலை காரணமாக சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஒரு சில பகுதிகளில் வழமை போன்று தபால்…
-
மொழியுரிமையை மறுத்த சிறிலங்கா காவல்துறை : வேலன் சுவாமிகள் கடும் கண்டனம்
பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நீதிக்கான பேரணி தொடர்பிலான வழக்கு நீதிமன்றில் முன்னெடுக்கப்படவுள்ளது. இதனடிப்படையில், குறித்த வழக்கு நாளை நாளை (14) கிளிநொச்சி (kilinochchi) நீதவான் நீதிமன்றில் நடைபெறவுள்ளது. இந்த வழக்கிற்கு முன்னிலையாகுமாறு சிறிலங்கா காவல்துறையினர் சிங்கள மொழியில் குறித்த அறிவித்தலை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர், வேலன் சுவாமிகள் (velan swamigal) தெரிவித்துள்ளார்.இவ்வாறு சிங்கள மொழியில் வழங்கப்பட்ட அறிவித்தல் மூலம் மொழியுரிமை முற்றாக…