Author: Menaka Mookandi
-
ஆயுதம் திருடியதில் கடற்படை வீரர் கைது
கொழும்பு துறைமுகத்தில் உள்ள ரன்வல கடற்படை ஆயுத களஞ்சியத்தில் இருந்து திருடப்பட்ட டி-56 துப்பாக்கியுடன் கடற்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தலைமையகம் தெரிவித்துள்ளது. கிடைத்த தகவலின்படி, கடற்படை தலைமையகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழு, குளியாபிட்டி காவல்துறை அதிகாரிகளின் உதவியுடன், கல்பொல காலனியின் இலுஹேன பகுதியில் கடற்படையில் பணியாற்றும் ஒரு சிப்பாயின் வீட்டை சோதனை செய்து, இந்த துப்பாக்கியைக் கண்டுபிடித்தனர். சந்தேகநபர் 2021 ஆம் ஆண்டு கொழும்பு துறைமுக ரன்வல முகாமில் இணைக்கப்பட்டு ஆயுதக் கிடங்கிற்குப்…
-
ஹஷிஸ் போதைப்பொருளுடன் கனேடிய பெண் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 360 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹஷிஸ் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 36 வயதான கனேடிய பெண், கனடாவின் ரொறன்ரோவில் இருந்து சனிக்கிழமை (15) வந்தடைந்தார். அதன் பின்னர் அவர் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை சுங்கத்துறைக்கு கிடைத்த சர்வதேச புலனாய்வுத் தகவலைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கொண்டு வந்த இரண்டு…
-
அசோக ரன்வல சான்றிதழ்களை வழங்க முடியாது என தெரிவித்துள்ளார்.
தனது கல்வித் தகமைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நிராகரித்துள்ள முன்னாள் சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக சபுமல் ரன்வல, அத்தகைய கோரிக்கைகள் வெறும் அரசியல் தந்திரோபாயங்கள் என்று கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் கல்வி தகமைகளை வழங்குவதன் அவசியம் குறித்து கேள்வி எழுப்பிய அவர், அது மக்களின் பிரச்சினை அல்ல என்றும் கூறியுள்ளார். இது தொடர்பில் பி.பி.சி. சிங்களத்திற்கு அளித்துள்ள செவ்வியில் கூறியுள்ளதாவது, சான்றிதழ்களை வழங்க பாராளுமன்றத்தில் ஒரு முறை உள்ளதா? அத்தகைய பாரம்பரியம் உள்ளதா? இவை…
-
அமெரிக்க அரசு நிறுவனங்களில் இருந்து 10000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம்
அமெரிக்க அரசு நிறுவனங்களில் இருந்து 10000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அரசின் செயல்துறை அதிகரிக்க DODGE துறையை உருவாக்கினார். இதற்கு டிரம்ப்பின் கோடீஸ்வர ஆதரவாளர் எலான் மஸ்க் தலைமை வகிக்கிறார். அரசின் தேவையற்ற செலவுகளை டிரம்புக்கு சுட்டிக்காட்டுவதே DODGE துறையின் கடமையாகும். இந்த நிலையில் பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள ஊழியர்களை எலான் மஸ்க் ஆலோசனையின் பேரில் டிரம்ப் பணிநீக்கம் செய்துள்ளார். உள்துறை, எரிசக்தி, படைவீரர் விவகாரங்கள், வேளாண்மை, சுகாதாரம்…
-
தெற்கு சைபீரியாவில் உள்ள அல்தாய் குடியரசில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தெற்கு சைபீரியாவில் உள்ள ரஷியாவின் அல்தாய் குடியரசில் 6.4 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ரஷிய நில அதிர்வு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. ஆனால் உயர் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. பொது நிகழ்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன மற்றும் நிலநடுக்க மையப்பகுதிக்கு அருகிலுள்ள பகுதிகளில் நீர் விநியோகத்தில் சிக்கல்கள் உள்ளதால் அவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது. நிலநடுக்கத்தால் ஒரு சில பகுதிகளில் சிறியளவிலான பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும், ஆனால் இணையதளத்தில் வதந்திகள் பரவி வருவதைப்…
-
ஜோன் எஃப். கென்னடி படுகொலை குறித்து 2,400 இரகசிய ஆவணங்கள் கண்டுபிடிப்பு
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எஃப். கென்னடி படுகொலை குறித்து விசாரணை நடத்தி வரும் அமெரிக்க பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன், கிட்டத்தட்ட 2,400 இரகசிய ஆவணங்கள் கையிருப்பில் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கென்னடியின் படுகொலை தொடர்பான பல முக்கிய தகவல்கள் ஆவணங்களில் உள்ளதாக பணியகம் கூறுகிறது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாக உத்தரவின்படி இந்த கொலை தொடர்பான விசாரணை மீண்டும் தொடங்கப்பட்டது. அதன்படி, கென்னடி படுகொலை தொடர்பான அரசு கோப்புகளை வெளியிட உத்தரவிடப்பட்டது.…
-
இஸ்ரேல் -ஹமாஸ் இடையேயான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது
இஸ்ரேல் -ஹமாஸ் இடையே ஓராண்டாக நீடித்து வந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டது. பணய கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. போர் நிறுத்தத்தின் முதற்கட்டமாக 6 வாரங்களில் (42 நாட்கள்) 33 பணய கைதிகளை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டது. 33 பணய கைதிகளுக்கு ஈடாக…
-
விபரீதமாக முடிந்த மோட்டார் சைக்கிள் பயணம் ஈரானில் பிரித்தானிய தம்பதி கைது
ஈரானில் சிறைபிடிக்கப்பட்டுள்ள பிரித்தானிய தம்பதியினரின் பெயர்களை அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர். கிரேக்(Craig) மற்றும் லிண்ட்சே ஃபோர்மேன்(Lindsay Foreman) என்ற பிரிட்டிஷ் தம்பதியினர் ஈரானில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த “கவலைக்கிடமான சூழ்நிலை” குறித்து ஃபோர்மேன் குடும்பத்தினர் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளனர் அவர்களின் விடுதலைக்காக பிரித்தானிய அரசாங்கத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். லிண்ட்சே ஃபோர்மேனின் சமூக ஊடக பதிவுகளின் படி, தம்பதியினர் நேர்மறை உளவியல் முயற்சியின் ஒரு பகுதியாக பிரித்தானியாவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு மோட்டார் சைக்கிள்…
-
மெக்சிகோவை பெயர் மாற்றிய கூகுள் நிறுவனம் மீது மெக்சிகோ ஜனாதிபதி எச்சரிக்கை
மெக்சிகோவை அமெரிக்க வளைகுடா என்று பெயர் மாற்றிய கூகுள் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷேன்பாம்(Claudia Sheinbaum) எச்சரிகை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றவுடன், மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என்று பெயர் மாற்றம் செய்வதாக டிரம்ப் அறிவித்தார். மெக்சிகோ வளைகுடா பெயர் மாற்றம் குறித்து டிரம்ப் அறிவித்த சில நாள்களிலேயே கூகுள் நிறுவனத்தின் கூகுள் மேப் செயலியில் மெக்சிகோ வளைகுடாவின் பெயரை அமெரிக்க வளைகுடா என்று பெயர்…
-
பிரபல நட்சத்திர லண்டன் ஹோட்டலில் தீ பலர் வெளியேற்றம்.
லண்டனில் உள்ள பிரபலமான 5 நட்சத்திர ஹோட்டலில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக நூற்றுக்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகின்றது. நேற்று மதியம் சில்டர்ன் ஃப்பயிர் ஹாவுஸ் (Chiltern Firehouse) ஹோட்டலில் இச் சம்பவம் இடம்பெற்றதாக கூறபடுகின்றது. 20 தீயணைப்பு வாகனங்களும் சுமார் 125 வீரர்களும் சம்பவ இடத்துக்கு அனுப்பட்டதாக லண்டன் தீயணைப்புத் துறை தெரிவித்தது. ஹோட்டலில் முதல்மாடியில் மூண்டத் தீ நாலாவது மாடி வரை பரவியதாகவும், எனினும் சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என்றும் ஹோட்டல் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள்…