Author: Menaka Mookandi
-
அதிகரிக்கும் ஊதியம் இலங்கை 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்
இலங்கையில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாடாளும்ன்றில் உரையாற்றி வருகின்றார். அந்தவகையில் அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் தெரிவிக்கையில், அரச சேவையில் முதல் அடிப்படை சம்பள திருத்தம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஒரு தசாப்தம் ஆகிவிட்டதால், அனைத்து காரணிகளையும் ஒட்டுமொத்தமாக மதிப்பிட்டு சம்பள கட்டமைப்பை திருத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. பொதுத்துறை ஊழியர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கைத் தரத்தை வழங்குவது அவசியம், மேலும் பட்ஜெட்டில் அதிக சுமையை…
-
சுமந்திரன் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக நியமனம்
ஸ்ரீலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் அங்கீகாரத்தைப் பெறத் தவறிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.எ.சுமந்திரன், இலங்கை தமிழரசுக் கட்சின் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை தமிழரசு கட்சியை கையகப்படுத்தும் எம்.எ.சுமந்திரனின் அடுத்த கட்ட நகர்வாக இந்த நியமனம் அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு, இன்று மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியிலுள்ள அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் காரியாலயத்தில் கூடியது. மாவை சேனாதிராவின் மறைவின் பின்னர் முதல் முறையாக…
-
விமானப் போக்குவரத்து கனடாவில் சீரற்ற காலநிலையினால் பாதிப்பு
கனடாவில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக விமானப் போக்குவரத்திற்கு பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக ரொறன்ரோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் பல விமானங்கள் தாமதமாகியுள்ளன மற்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த புயலுக்கு எதிராக பல நாட்களாக முன்னேற்பாடு செய்யப்பட்டிருந்ததாக கிரேட்டர் டொரொன்டோ விமான அதிகாரசபை (GTAA) பேச்சாளர் எரிக்கா வெல்லா தெரிவித்துள்ளார் பனிப்பொழிவு ஏற்பட்டதும் அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். பயணிகள் விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்பு தங்கள் விமானப் பயண ஏற்பாடுகள்…
-
ரொறன்ரோவில் இடம்பெற்ற தீ விபத்தினால் 12 பேர் காயம்
ரொறன்ரோவில் இடம்பெற்ற தீ விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தீ விபத்தில் மேலும் பலர் இடம்பெயர நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரொறன்ரோ டவுன்ரவுன் பகுதியில் அமைந்துள்ள அடுக்கு மாடி கட்டடமொன்றில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த கட்டடத்தின் ஆறாம் மாடியில் தீ விபத்து பதிவானதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தீ விபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
-
கனடாவின் சில பகுதிகளில் கடும் குளிர் குறித்து எச்சரிக்கை
கனடாவின் சில பகுதிகளில் கடுமையான குளிர் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. மேற்குக் கனடா மற்றும் பகுதியில் இவ்வாறு கடுமையான குளிர் நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. மறை 30 பாகை செல்சியஸ் முதல் மறை 50 பாகை செல்சியஸ் வரையில் கடுமையான குளிர் நீடிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. கல்கரி, எட்மோன்டன், றெனினா, சஸ்காடூன், வின்னிபெக் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான குளிர் நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது
-
ரணில் இந்திய வெளியுறவு அமைச்சரை சந்தித்தார்.
ஓமானில் நடைபெற்ற 8வது இந்தியப் பெருங்கடல் மாநாட்டின் போது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கேவை இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் சந்தித்தார். முன்னாள் ஜனாதிபதி விக்ரமசிங்க மாநாட்டில் விருந்தினர் பேச்சாளராக கலந்து கொள்கிறார். ஓமான் வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து இந்தியா அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ள 8வது இந்தியப் பெருங்கடல் மாநாடு, பிப்ரவரி 16–17, 2025 அன்று மஸ்கட்டில் நடைபெறுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள் ‘கடல்சார் கூட்டாண்மையின் புதிய எல்லைகளை நோக்கிய பயணம்’ என்பதாகும்.
-
இலங்கைக்கு சீன அதிகாரிகள் விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நல்லிணக்கம் மற்றும் இன விவகாரங்களுக்கான சீன அமைச்சர் பான் யூ தலைமையிலான உயர் மட்ட குழுவினர் எதிர்வரும் 19ஆம் திகதி புதன்கிழமை இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்டவர்களை சந்திக்க உள்ளதுடன், கண்டி மற்றும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சீன அமைச்சர் பான் யூ, இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், இன நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்க முயற்சிகள்…
-
அஸ்வெசும’ தொடர்பில் தலைமைச் செயலகம் அறிவிப்பு
அஸ்வெசும’ நலத்திட்ட உதவிகளைப் பெறும் குடும்பங்களில், 70 வயதுக்கு மேற்பட்டவர்களைத் தவிர, ஏனைய மூத்த குடிமக்களுக்கும், தபால் மற்றும் துணை அஞ்சல் அலுவலகங்கள் மூலம் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும் என்று தேசிய மூத்த குடிமக்கள் தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரை ‘அஸ்வெசும’ உதவித்தொகை பெற்று வரும் மூத்த குடிமக்கள், இந்த மாதத்திற்கான உதவித்தொகையை 20ஆம் திகதி முதல் தபால் மற்றும் துணை அஞ்சல் அலுவலகங்களில் இருந்து பெற முடியும் என்று தேசிய மூத்த குடிமக்கள் தலைமைச்…
-
ஜனாதிபதி வரவு-செலவுத் திட்டத்தின் இறுதி வரை பார்வையிட்டார்
2025ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் இறுதி வரைபை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று ஞாயிற்றுக்கிழமை (16) ஜனாதிபதி அலுவலகத்தில் பார்வையிட்டுள்ளார். இதன்போது, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவும் இணைந்து கொண்டுள்ளார்.