Author: Menaka Mookandi
-
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக பிடியாணை அவர் தலைமறைவு
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் காணாமல் போயுள்ளதாகவும், அவர் கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார். அவர் இருக்கும் இடம் குறித்த எந்தவொரு தகவலையும் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) தெரிவிக்குமாறு…
-
தேசிய ஊடகக் கொள்கை எதிர்வரும் ஜுன் மாதத்தில் வெளியாகும் என அரசாங்கம் அறிவிப்பு
தேசிய ஊடகக் கொள்கை எதிர்வரும் ஜுன் மாதத்தில் வெளியிடப்பட உள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுவரும் வரவு-செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். ”அரச ஊடகங்கள் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் பின்னிலையில் உள்ளன. அவற்றை தொழில்நுட்பமயப்படுத்த வேண்டும். இதற்கான ஜப்பான் அரசு நன்கொடையை வழங்கியுள்ளது. ஏனைய ஊடகங்களுக்கு நிகராக அரச ஊடகங்களை கட்டியெழுப்ப வேண்டும். ஊடகவியலாளர்களுக்கு 100 புலமை…
-
மாணவர்கள் சட்டத்துக்கு விரோதமான போராட்டங்களில் ஈடுபடக்கூடாது தடை விதிக்கும் டிரம்ப்
அமெரிக்க கல்லூரிகளில் படித்து வரும் வெளிநாட்டு மாணவர்கள், கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராகவோ அரசுக்கு எதிராகவோ போராட்டம் செய்தால், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என அதிபர் டிரம்ப் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் காரணமாக, வெளிநாட்டு மாணவர்கள் போராடினால், அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்ற நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து, டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது, அமெரிக்காவில் உள்ள எந்த ஒரு கல்லூரி அல்லது கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள்…
-
ஐரோப்பாவில் புகை குண்டுகளை வீசி எதிர்க்கட்சியினர் தாக்குதல்
ஐரோப்பாவில் செர்பியா நாட்டு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கண்ணீர் குண்டுகள், புகைகுண்டுகளை வீசியதால் 3 எம்பிக்கள் காயமடைந்தனர். மார்ச் 04 ஆம் திகதி கூடிய மக்களவை கூட்டத்தின்போது சேர்பியன் ப்ராக்ரசிவ் கட்சி தலைமயிலான ஆளும் கூட்டணி (SNS) யை எதிர்த்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். பல்கலைக்கழகங்களுக்கான நிதி அதிகரிப்பு குறித்த வாக்கெடுப்பு இன்று நடைபெற இருந்தது. ஆனால் இந்த அவை சட்டவிரோதமானது என்றும் அந்நாட்டு பிரதமர் மிலோஸ் உசெவிகின் ராஜினாமாவை முதலில் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறி…
-
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்க மக்களின் கனவை நனவாக்க உழைத்து வருகிறோம் என தெரிவிப்பு
அமெரிக்க மக்களின் கனவை நனவாக்க உழைத்து வருகிறோம் என அமெரிக்க ஜனாதிபதி று டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றதற்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் முதல்முறையாக உரையாற்றினார். இதன்போது எதிர்க்கட்சிகளிடன் கடும் அமளிக்கிடையே ஜனாதிபதி டிரம்ப் கூறுகையில், அமெரிக்க ஜனாதிபதியாக நான் பொறுப்பேற்றவுடன் அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டது. அமெரிக்கர்களின் கனவை நினைவாக்க உழைத்து வருகிறோம். கடந்த 6 வாரங்களில், நான் கிட்டத்தட்ட 100 நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளேன், 400க்கும் மேற்பட்ட…
-
டொரோண்டோ பெரும்பாக பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
டொரோண்டோ பெரும்பாக பகுதி மக்களுக்கு வெள்ள அபாயம் காரணமாக நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம், மற்றும் இயற்கை உறைபனி மேற்பரப்புகளில் நுழைய வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கனடாவின் சுற்றுச்சூழல் திணைக்களம் ஒரு சிறப்பு வானிலை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. மழை மற்றும் மிதமான வெப்பநிலைகள் காரணமாக நகரின் சில பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் வெள்ளம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ளது. தேசிய வானிலை நிறுவனத்தின் தகவலின்படி, செவ்வாய்க்கிழமை இரவு மற்றும் புதன்கிழமை 15 முதல் 25…
-
அமெரிக்காவுடனான வர்த்தக போரில் இருந்து ஒருபோதும் பின் வாங்க போவதில்லை என கனடா திட்டவட்டம்
அமெரிக்காவுடனான வர்த்தக போரில் இருந்து ஒருபோதும் பின் வாங்க போவதில்லை என கனடா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக ஜன.,20ல் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 25 சதவீத வரியை விதிக்கும் உத்தரவை டிரம்ப் பிறப்பித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 25 சதவீத வரி விதிப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின்…
-
யோஷித்த ராஜபக்சவின் பாட்டி கைது
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித்த ராஜபக்சவின் பாட்டி டெய்சி பொரெஸ்ட் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பணமோசடி சட்டத்தின் கீழ் வாக்குமூலம் அளிக்க அவர் இன்று (05) குற்றப் புலனாய்வுத் துறைக்கு வந்திருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
-
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் முதல்வாரத்தில் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏப்ரல் 5 ஆம் பிரதமர் மோடி இரண்டுநாள் பயணமாக இலங்கை வருவார் என்றும் இந்தப் பயணம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுப்பாலத்தை மேலும் பலப்படுத்தும் என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோடியின் இந்தப் பயணத்தில் இருநாடுகளுக்கு இடையிலான நில இணைப்பு மற்றும் பொருளாதார உறவுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும் செய்திகள்…
-
இலங்கைப் பொலிஸாருக்கு புதிய தொழினுட்பத்துடனான “ஸ்பீட் கன்”
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட புதிய தொழினுட்பத்துடனான “ஸ்பீட் கன்” (Speed Gun) இலங்கைப் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது. வீதி விபத்துகளைக் குறைத்தல் மற்றும் பாதுகாப்பை உறுதிப்பத்தும் நோக்கில் பொலிஸாருக்கு இந்த கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் வாகனங்களை கண்காணிப்பதற்கு இந்த உபகரணங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல குறிப்பிட்டுள்ளார். இவை சுமார் 1.2 கிலோமீற்றர் தூரத்திலிருந்து வாகனங்களைக் கண்டறிந்து, வாகனத்தின் வேகம், சாரதியின் புகைப்படம்…