Author: Menaka Mookandi
-
நாடளாவிய ரீதியிலான மின்தடைக்கு காரணம் வெளியானது
நாடு முழுவதும் கடந்த 09ஆம் திகதியன்று ஏற்பட்ட மின் தடை குறித்து நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, மின் பரிமாற்றத்தில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வு காரணமாக இந்த மின்தடை ஏற்பட்டதாக அறிக்கை கூறுகிறது. எனவே, மீண்டும் மின்தடை ஏற்படுவதைத் தடுக்க குறுகிய மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
-
வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம்
2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 25 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து குழுநிலை விவாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகி, மார்ச் மாதம் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. வரவுசெலவுத்திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் மார்ச் 21 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
-
ரொறன்ரோவில் விமானம் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்18 பேர் காயம்
கனடாவின் ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் விமானமொன்று தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சுமார் பதினெட்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பியர்சன் விமான நிலையத்தின் ஓடு பாதையில் தரையிறங்கிய போது விமானம் தலைகீழாக கவிழ்ந்துள்ளது. விமான நிலையப் பகுதிகளில் பலத்த காற்று வீசியதாகவும் கடுமையான பனிப்பொழிவு நிலைமை காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் எதனால் இந்த விபத்து ஏற்பட்டது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த விமானத்தில் விமானப் பணியாளர்கள் உள்ளிட்ட 80 பேர் பயணம்…
-
சுமார் 170 பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் நாடு கடத்தல்
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE), ஓமன் மற்றும் பல நாடுகளில் இருந்து கடந்த 48 மணி நேரத்தில் சுமார் 170 பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். நாடு கடத்தலை அடுத்து கராச்சியை வந்தடைந்த அவர்களில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் செய்தி வெளியிட்டுள்ளது. குடியேற்ற ஆதாரங்களின்படி, சவுதி அதிகாரிகள் 94 பாகிஸ்தானியர்களை 48 மணி நேரத்திற்குள் நாடுகடத்தியுள்ளனர். கறுப்பு பட்டியலில் உள்ளவர்கள், யாசகம் பெறுபவர்கள், போதைப்பொருள் வியாபம், சட்டவிரோதமாக தங்கியிருப்பது, சட்டவிரோதமாக வேலை செய்தல்,…
-
சவுதி சென்ற அமெரிக்க அதிகாரி ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை
உக்ரேனில் மொஸ்கோவின் ஏறக்குறைய மூன்றாண்டு காலப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் ரஷ்ய அதிகாரிகளுடன் எதிர்பார்க்கப்படும் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ திங்களன்று சவுதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசியில் பேசி, போர் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்க உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவர் தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் உக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வருவதாக பலமுறை சபதம் செய்ததை…
-
30 பேரை பலியெடுத்த கோர விபத்து : பொலிவியாவில்
பொலிவியாவின் யோகல்லா பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். பேருந்து, சாரதியின் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் 800 மீட்டர் பள்ளத்தில் விழுந்ததாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் நான்கு குழந்தைகள் உட்பட 14 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
-
கனடாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் காயம்.
கனடாவின் டொரொண்டோவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் நேற்று முன்தினம் பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த அடுக்கு மாடிக்குடியிருப்பின் 6 ஆவது மாடியில் இத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படைவீரர்கள் மற்றும் பொலிஸார் அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்தவர்களை மீட்டுள்ளதுடன் தீப்பரவலையும் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இத்தீவிபத்தில் 12 பேர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று…
-
கனடாவில் பனி உந்தி விபத்தில் ஒருவர் உயிர் இழப்பு
கனடாவில் ஸ்னோவ் மொபைல் அல்லது பனி உந்தி விபத்தில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 55 வயதான நபரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. டர்ஹம் பகுதியில் புரொக் என்னும் இடத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மற்றுமொரு பனி உந்தி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பின்னால் சென்ற பனி உந்தி மோதியதில் குறித்த நபர் வீசி எறியப்பட்டதாகவும் அதனால் பலத்த காயங்களுக்கு உள்ளாகியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விபத்து இடம்பெற்ற பகுதிக்கு விரைந்த உயிர்காப்பு பணியாளர்கள் அவசர…
-
அமெரிக்காவில் திடீர் கனமழையால் வெள்ளத்தில் சிக்கி 9 பேர் பலி
அமெரிக்காவின் சில பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் மின்சாரம் இல்லாமல் தவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தென்கிழக்கு மாநிலமான கென்டக்கியில் மட்டும் 7 வயது குழந்தை உட்பட எட்டு பேர் இறந்தனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், என்று மாநில ஆளுநர் ஆண்டி பெஷியர் கூறினார். பெரும்பாலான இறப்புகள் கார்கள் அதிக நீரில் சிக்கியதால் ஏற்பட்டவை என்றும் கூறினார். எனவே மக்களே, இப்போதே சாலைகளைத் தவிர்த்து…
-
டொரன்டோவில் இடம் பெற்ற கொலையுடன் தொடர்புடைய நபரை தேடும் போலீசார்
கனடாவின் டொரன்டோவில் இடம் பெற்ற படுகொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய நபரை போலீசார் தேடி வருகின்றனர். ஸர்பருன் மற்றும் குயின் வீதிகளுக்கு அருகாமையில் கடந்த 5ம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். 43 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டிருந்தார். இந்த படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் ரொபர்ட்சன் பெரி என்ற 24 வயதான நபரை போலீசார் தேடி வருகின்றனர். குறித்த நபருக்கு எதிராக நாடு தழுவிய அடிப்படையில் பிடிவிராந்து உத்தரவு…