Author: Menaka Mookandi

  • உக்ரைன் மீதான யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம்

    உக்ரைன் மீதான யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம்

    ரஷ்ய – உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைனே ஜனாதிபதியே காரணம் என தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உக்ரைன் யுத்தத்தை ஆரம்பித்திருக்க கூடாது என தெரிவித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதியை தான் சந்திக்ககூடும் என தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப் , மொஸ்கோவின் படையெடுப்பிற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என குற்றம்சாட்டியுள்ளார். சவுதிஅரேபியாவில், அமெரிக்க ரஸ்ய அதிகாரிகளின் சந்திப்பு இடம்பெற்ற பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார். அதேவேளை ரஷ்யாவுடனான யுத்த நிறுத்த பேச்சுவார்த்தையில் உக்ரைனிற்கு இடமளிக்கப்படவில்லை…

  • டொரன்டோவில் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு.

    டொரன்டோவில் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு.

    கனடாவின் டொரன்டோ நகரில் வரி அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. டொரன்டோ நகர முதல்வர் ஒலிவியா சௌ தாக்கல் செய்த வரவு செலவு திட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வரி அதிகரிப்பிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டொரன்டோவில் அதிகரிக்கப்பட உள்ள வரி | Toronto Council Approves Mayor Chows இதன்படியே வரி வீதமானது 6.9 வீதத்தினால் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. முதல்வரினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் எவ்வித நிறைவேற்றப்பட்டுள்ளது சொத்து…

  • விசாரணையை துவக்கியுள்ள இந்தியா : கனடாவில் கொள்ளையடிக்கப்பட்ட 400 கிலோ தங்கம்

    விசாரணையை துவக்கியுள்ள இந்தியா : கனடாவில் கொள்ளையடிக்கப்பட்ட 400 கிலோ தங்கம்

    திரைப்பட பாணியில் கனடா விமான நிலையத்தில் 6,600 தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் இந்தியா விசாரணயைத் துவக்கியுள்ளது. 2023ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி, சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலுள்ள வங்கி ஒன்றிலிருந்து கனடாவின் ரொரன்றோவுக்கு இரண்டு பார்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றின் மீது ’பணம் மற்றும் தங்கக்கட்டிகள்’ என குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது. அந்த பார்சல்களில் 6,600 தங்கக்கட்டிகள் இருந்துள்ளன. அவற்றின் எடை சுமார் 400 கிலோகிராம். கனடாவின் ரொரன்றோ விமான நிலையத்திலுள்ள சரக்குகள் சேமிப்பகத்தில் அந்த பார்சல்கள் வைக்கப்பட்டிருந்திருக்கின்றன.…

  • சஜித் ஆதங்கம் நீதிமன்றில் துப்பாக்கிச்சூடு

    சஜித் ஆதங்கம் நீதிமன்றில் துப்பாக்கிச்சூடு

    நாட்டில் கொலைகள் அதிகரித்துள்ளதால், வீதியில் நடந்து செல்லவோ அல்லது நீதிமன்றத்திற்குச் செல்லவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். புதுக்கடை நீதிமன்றத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவிக்கையில், மேலும், “சட்டம் ஒழுங்கில் கடுமையான நெருக்கடி உருவாகியுள்ளது. தினமும் கொலை சம்பவங்கள் நடைபெறுகின்றன. சிறு குழந்தைகள் கூட கொல்லப்படுகிறார்கள். இதைவிட ஒரு…

  • யாழில் இடம்பெற்ற கோர விபத்து : ஸ்தலத்திலேயே ஒருவர் பலி

    யாழில் இடம்பெற்ற கோர விபத்து : ஸ்தலத்திலேயே ஒருவர் பலி

    யாழ்ப்பாணம் (Jaffna) காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆணொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து அரியாலை – மாம்பழம் சந்தியில் இன்று (18) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இதன்போது 55 வயது மதிக்கத்தக்க ஆணொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் நோக்கி துவிச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த குறித்த நபரின் மீது, யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு (Teaching Hospital Jaffna) கொண்டு செல்லப்பட்டுள்ளது.…

  • அரச ஊழியர் சம்பள உயர்வு குறித்து வெளியான தகவல்

    அரச ஊழியர் சம்பள உயர்வு குறித்து வெளியான தகவல்

    2025 வரவு செலவுத் திட்டத்தில் திட்டமிடப்பட்ட அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்து தொழிலாளர் பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க விளக்கம் (Mahinda Jayasinghe) அளித்துள்ளார். வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் இன்று கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் அதனை குறிப்பிட்டுள்ளார். அதன்போது, அரச ஊழியர் சம்பள அதிகரிப்பு தொடர்பாக சிலர் பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாகக கூறியுள்ளார். இந்த நிலையில், சம்பந்தப்பட்ட சம்பள அதிகரிப்புடன், அரச சேவையின் மிகக் குறைந்த மட்டத்தில் உள்ள PL…

  • பாப்பரசர் பிரான்ஸிஸ் இற்கு நிமோனியா தொற்று

    பாப்பரசர் பிரான்ஸிஸ் இற்கு நிமோனியா தொற்று

    கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவர் போப் பிரான்ஸிஸுக்கு இரு நுரையீரல்களிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டுள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது. 88 வயதான பாப்பரசர் சுவாச நோயால் பாதிக்கப்பட்டு ரோமில் உள்ள ஜெமெல்லி வைத்தியசாலையில் கடந்த (14) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பாப்பரசருக்கு நேற்றையதினம் மேற்கொண்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில் இரு நுரையீரல்களிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது. பரிசோதனைகள், நெஞ்சு பகுதியில் எடுக்கப்பட்ட எக்ஸ்ரே மற்றும் மருத்துவ அறிக்கைகள் நோய் ஆபத்தானது என்பதை காட்டுக்கின்றது. எனினும் போப்…

  • கனடாவில் உணவுப் பொருட்களின் விலைகளில் 8 ஆண்டுகளின் பின்னர் ஏற்பட்ட மாற்றம்.

    கனடாவில் உணவுப் பொருட்களின் விலைகளில் 8 ஆண்டுகளின் பின்னர் ஏற்பட்ட மாற்றம்.

    கனடாவில் எட்டு ஆண்டுகளின் பின்னர் உணவுப் பொருட்களின் விலைகளில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் முதல் தடவையாக உணவுப் பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன. கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது ஜனவரி மாத்தத்தில் ஒட்டு மொத்த பணவீக்க வீதம் அதிகரித்துள்ளது. எரிபொருட்களுக்கான விலை அதிகரிப்பு காரணமாக இவ்வாறு பணவீக்கம் அதிகரித்துள்ளது.

  • அமெரிக்க ஜனாதிபதி அணு ஆயுத திட்ட பணியாளர்களுக்கு விடுத்துள்ள உத்தரவு

    அமெரிக்க ஜனாதிபதி அணு ஆயுத திட்ட பணியாளர்களுக்கு விடுத்துள்ள உத்தரவு

    ¤பணியில் இருந்து நீக்கிய நூற்றுக்கணக்கான அமெரிக்க அணு ஆயுதத் திட்டப் பணியாளர்களை, மீண்டும் பணியமர்த்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாகக் கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் திகதி பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார். அந்தவகையில் அரசின் செலவினத்தை குறைக்கும் வகையில் அண்மையில் நூற்றுக்கணக்கான அமெரிக்க அணு ஆயுத திட்டப் பணியாளர்களை திடீரென கடந்த வாரம் பணியில் இருந்து நீக்கி ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார். இவ்வாறு பணியிலிருந்து நிறுத்தப்பட்டோரில்,…

  • சுற்றுலா பயணிகளை சோப்பு நுரையை பயன்படுத்தி ஏமாற்றிய சீனா நிர்வாகம்.

    சுற்றுலா பயணிகளை சோப்பு நுரையை பயன்படுத்தி ஏமாற்றிய சீனா நிர்வாகம்.

    சீனாவில் உள்ள சுற்றுலாத்தளம் ஒன்றில் பருத்தி மற்றும் சோப்பு நுரையை பயன்படுத்தி பனிப்பொழிவு இருப்பதுபோல் பயணிகளை ஏமாற்றியுள்ளது. சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக சீனாவின் தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் புதிதாக செங்டு பனிக்கிராமம் திறக்கப்பட்டது. இக்கிராமத்தில் நிலவும் பனிப்பொழிவை பார்க்க ஏராளனமான சுற்றுலா பயணிகள் அங்கு வருகை தந்திருந்த நிலையில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த இடத்தில பருத்தி மற்றும் சோப்பு நுரையை கொண்டு பனிப்பொழிவு இருப்பது போல் காட்டியுள்ளதை கண்டு ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள் இது தொடர்பாக…