Author: Menaka Mookandi

  • மட்டக்களப்பு நீதிமன்றங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    மட்டக்களப்பு நீதிமன்றங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவுக்கு அமைய வியாழக்கிழமை (20) மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன். நீதிமன்ற கட்டிடத் தொகுதியை அண்டிய வளாகங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் சகல வாசல்களிலும் காவல் துறையினைர பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர், மேலும் நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்குள் பிரவேசிக்கும் சகல வாகனங்களும் பரிசோதிக்கப்பட்டதன் பின் நீதிமன்ற வளாகத்தினுள் செல்ல அனுமதிக்கப்பட்டதை காணக்கூடியதாக இருந்தது நீதிமன்ற பிரதான வீதிகளில் போக்குவரத்து போலிசாரும் கடமைகளில் ஈடுபட்டுள்ளமையும் அவதானிக்க…

  • தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்த ஜீவன் தொண்டமான்.

    தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்த ஜீவன் தொண்டமான்.

    இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஜீவன் தொண்டமான் மரியாதை நிமித்தமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று புதன்கிழமை சந்தித்தார். இந்தச் சந்திப்பில் தமிழகம் மற்றும் மலையக மக்கள் இடையிலான தொடர்பு பற்றி இருவரும் கலந்துரையாடியுள்ளதுடன், எதிர்கால அரசியல் செயல்பாடுகள் குறித்தும் இருவரும் கலந்துரையாடினர்.

  • கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

    கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

    கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிவரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள குற்றவியல் பிரிவில் நீதிமன்றப் பணிகள் பிரிவில் கடமையாற்றிவந்த சந்தேகநபர், பாதெனிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். கனேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தற்போது தலைமறைவாகியுள்ள சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி வீரசிங்கவுடன் அவர் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை அதிகாரிகள்…

  • காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை இரத்து செய்யும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை

    காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை இரத்து செய்யும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை

    மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை இரத்து செய்யும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை என தெரிவித்த அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவது குறித்த உடன்பாடொன்றை எட்டத் தவறியதால் நிறுவனம் திட்டத்திலிருந்து விலகியதாக கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், “உள்ளூர் நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மூலமாகவோ மக்கள் நியாயமான விலையில்…

  • மீன்பிடித்த இருவர் கனடாவில் பரிதாபமாக மரணம்

    மீன்பிடித்த இருவர் கனடாவில் பரிதாபமாக மரணம்

    கனடாவின் அல்பர்ட்டா குரோ லேக் ப்ரொவின்ஷியல் பூங்காவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை அவசர சேவை படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். பனியில் மீன்பிடிக்கும் கூடத்தில் இரண்டு ஆண்கள் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். கூடத்தில் கார்பன் மோனாக்ஸைடு விஷவாயு தாக்த்தனால் இந்த இருவரும் உயிரிழந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். உயிரிழந்தவர்களின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால், ஒருவர் 45 வயதான ஃபோர்ட் மெக்மரே நகரைச் சேர்ந்தவராகவும், மற்றொருவர்…

  • கனடாவில் இடம்பெற்ற தீ விபத்தில் முதியவர் பலி

    கனடாவில் இடம்பெற்ற தீ விபத்தில் முதியவர் பலி

    கனடாவின் நோர்த் பே தெற்கே உள்ள போர்ட் லோரிங் பகுதியில் திங்கள் காலை ஏற்பட்ட வீடொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒரு முதியவர் உயிரிழந்துள்ளார். மேலும் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆர்கைல் தீயணைப்புத் துறை, நோர்த் பே அவசர மருத்துவ சேவை, மற்றும் ஒன்டாரியோ மாகாண போலீசார் கடந்த திங்கள் காலை 7:15 மணியளவில் லவெர்ஸ் லேன் பகுதியில் உள்ள வீட்டிற்கு அழைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். “போர்ட் லோரிங் பகுதியைச் சேர்ந்த 80 வயது…

  • கனடாவில் வீடுகள் விற்பனையில் வீழ்ச்சி

    கனடாவில் வீடுகள் விற்பனையில் வீழ்ச்சி

    கனடாவில் வீடுகளின் விற்பனையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய வீட்டு மனை ஒன்றியம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் வீடுகளின் விற்பனையானது கடந்த டிசம்பர் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது 3 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் வீடுகளின் விற்பனை ஜனவரி மாதத்தில் 2.9 வீதத்தினால் அதிகரித்துள்ளது. வரி விதிப்பு வட்டி வீதம் போன்ற காரணிகளின் அடிப்படையில் வீடுகளின் விற்பனை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த…

  • பனிப்பாறை சரிவில் சிக்கி கனடாவில் ஒருவர் பலி

    பனிப்பாறை சரிவில் சிக்கி கனடாவில் ஒருவர் பலி

    பிரிட்டிஷ் கொலம்பியா – அல்பெர்டா எல்லைக்கு அருகே உள்ள ராக்கி மலைப்பகுதியில் நடந்த பனிப்பாறைச் சரிவில் 42 வயது ஆண் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கப்ரிஸ்டோ மலையில் இடம்பெற்றுள்ளது. பனிச்சரிவு குறித்த கனடிய நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவான தகவலின்படி, இந்த பனிச்சரிவு “அளவு 2, காற்றால் உருவான பனிச்சரிவு” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் 2,280 மீட்டர் உயரத்தில் ஏற்பட்டுள்ளது. பனிச்சரிவுகளின் அளவு 1 முதல் 5 வரை வகைப்படுத்தப்பட்டாலும், அளவு 2 என்றால் கூட ஒருவர்…

  • மூன்றாவது நாளாகவும் பியர்சன் விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து

    மூன்றாவது நாளாகவும் பியர்சன் விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து

    கனடாவின் ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் மூன்றாவது நாளாகவும் விமானப் பயணங்கள் தாமதமானதாகவும் ரத்து செய்யப்பட்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது. டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் விபத்து தொடர்பான விசாரணை இன்னும் நடைபெற்று வருகின்றமையே இதற்கு காரணமாகும். கடந்த திங்கட்கிழமை பிற்பகலில் 80 பேருடன் வந்த விமானம் தரையிறங்கும் போது தலைகீழாக கவிழ்ந்து விமானம் விபத்துக்குள்ளாகியிருந்தது. இதனால் பியர்சன் விமான நிலையத்தின் ஐந்து ஓடுதளங்களில் இரண்டு மூடப்பட்டுள்ளன. இந்த விபத்தில் 21 பேர் காயமடைந்தனர், இவர்களில் 19 பேர் தற்பொழுது…

  • நாடாளுமன்ற பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    நாடாளுமன்ற பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    நாடாளுமன்ற பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாடாளுமன்ற வளாகத்திற்குள் வருகைத்தரும் வாகனங்கள், நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். நாடாளுமன்றம் கூடும் தினங்களில் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நிலையில், நேற்று (19) புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (20) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்திற்கு வருகைத் தரவுள்ளார்.