Author: Menaka Mookandi
-
‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது
அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் மில்லியன் டொலர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் சசிக்குமார், சிம்ரன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி. அண்மையில் இப் படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருந்தது. வித்தியாசமான கதைக்களத்தில் சசிக்குமார் மற்றும் சிம்ரன் இருவரும் பேசும் இலங்கைத் தமிழ் ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான முகை மழை பாடல் வெளியாகியுள்ளது.
-
‘வரவு – செலவுத் திட்டம்’ மக்கள் ஆணைக்கு எதிரானது
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து விவாதிக்கும் போது, இந்த வரவு செலவுத் திட்டத்தினூடாக நாட்டிற்கு வழங்கப்பட்ட தீர்வுகள் மற்றும் பதில்களை பகுப்பாய்வு செய்யும் போது, அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்டமானது கிடைத்த மக்கள் ஆணைக்கு எதிராக தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டமாகும். வளமான நாடு அழகான வாழ்க்கை, நாடு அநுரவோடு என முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் இதில் அமைந்துள்ளனவா என பார்க்கும் போது இந்த வரவுசெலவுத் திட்டம் வாக்குறுதியளித்தபடி…
-
பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் கனடாவில்
கனடாவில் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடா மொத்தம் 500,000 மனித பறவை காய்ச்சல் (Bird Flu) தடுப்பூசிகளை கொள்வனவு செய்துள்ளது. எதிர்ப்பாராத நிலைமைகளுக்கு தயாராக இருப்பது முக்கியம் என கனடாவின் பொது. பிரிட்டிஷ் மருந்துப் பொருள் நிறுவனம் GSK தயாரித்த இந்த தடுப்பூசிகள், அவசியமான தருணங்களில் பயன்படுத்த முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கையாக கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பறவை காய்ச்சல் தொற்று ஏற்படும் அபாயம் தற்போது குறைவாக உள்ளது என்று பொது சுகாதார…
-
ஆளில்லா விமானங்களை உக்ரைனில் ஏவிய ரஷ்யா!
யுக்ரைனின் வடகிழக்கு பகுதியிலுள்ள உட்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா 161 ஆளில்லா விமானங்களை ஏவியதாக யுக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது. குறித்த தாக்குதலால் பல உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏவுகணை தாக்குதலால் எரிவாயு உற்பத்தி மையங்கள் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு வலுசக்தி அமைச்சர் ஜெர்மன் கலுஷ்செங்கோ (German Galushchenko) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கடந்த நாட்களில் மாத்திரம் ரஷ்யா 122 தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும் யுக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேல் 4 பிணைக் கைதிகளின் உடல்களை ஒப்படைக்கின்றது.
ஹமாஸ் போராளிகள் நான்கு இஸ்ரேலிய பணயக்கைதிகளின் உடல்களை திருப்பி அனுப்பியுள்ளனர். அவர்களில் ஷிரி பிபாஸ் மற்றும் அவரது இளம் குழந்தைகள், கிஃபிர் மற்றும் ஏரியல் ஆகியோர் அடங்குவர். தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகருக்கு வெளியே உள்ள ஒப்படைப்பு இடத்தில், ஹமாஸ் மற்றும் பிற பிரிவுகளைச் சேர்ந்த முகமூடி அணிந்த மற்றும் ஆயுதமேந்திய போராளிகளின் கணிசமான குழு உட்பட, ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். இறந்த நான்கு பணயக்கைதிகளின் எச்சங்களை சுமந்து சென்ற சவப்பெட்டிகள் இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைந்துவிட்டதாக…
-
வரவு செலவுத்திட்டம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் தெரிவிப்பு.
வரவு செலவுத்திட்டம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என தான் மனதார பிரார்த்திப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இன்று (21) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். வரவு செலவுத் திட்டத்தில் காணப்படும் மக்கள் நல நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு நாங்களும் ஆதரவளிப்போம் எனவும் அவர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் மேலும் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், “வளமான நாடு, அழகான வாழ்வு என்ற கொள்கையை, மக்கள் ஆணையைப் பெறுவதற்காக நீங்கள் முன்வைத்தீர்கள். குறித்த கொள்கை தொகுப்பில்…
-
ஜனாதிபதி அநுரவுக்கு மாலைதீவுக்கு வருமாறு அழைப்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மாலைதீவு குடியரசின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீலுக்கும் (Abdulla Khaleel) இடையிலான சந்திப்பு நேற்று (20) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கடந்த தேர்தல்களில் ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்குக் கிடைத்த வெற்றி தொடர்பில் மாலைதீவு குடியரசின் வாழ்த்துக்களைத் தெரிவித்த வெளியுறவு அமைச்சர், தேர்தல் வெற்றிக்குப் பிறகு நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் மகிழ்ச்சி தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவிற்குப் பிறகு, வலுவான நாடாக எழுச்சியடைந்து வருவது தமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகவும், மாலைதீவை…
-
கனடாவில் 15 மில்லியன் டொலர் மதிப்புள்ள களவாடப்பட்ட கார்கள் மீட்பு
ஹாமில்டன் மற்றும் தெற்கு ஒன்டாரியோவில் செயல்பட்ட வாகனத் திருட்டு கும்பலிடமிருந்து 15 மில்லியன் டொலர் மதிப்புள்ள வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஹாமில்டன் போலீசார் (HPS) இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர். அழகிய மற்றும் உயர்தர வாகனங்களை குறிவைத்து திருடிய இந்த கும்பல், அவற்றை தேசிய மற்றும் சர்வதேச அளவில் விற்பனை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் பொலிஸார் 7 பேரை கைது செய்துள்ளனர் என்பதுடன் மேலும் 19 வயதான ஹாசன் சுலைமான் என்பவரை போலீசார் தேடி…
-
அகதி நிலை கோரி கனடாவில் விண்ணப்பிப்போர் எண்ணிக்கை கடும் வீழ்ச்சி
கனடாவில் அகதி நிலை கோரி விண்ணப்பிப்போர் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் குறைந்துள்ளது. 2023ஆம் ஆண்டில், கனடாவில் அகதி நிலை கோரி விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 1.8 மில்லியன். அதுவே, 2024இல் கனடாவில் அகதி நிலை கோரி விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 1.5 மில்லியன் ஆக குறைந்துவிட்டதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. 2023ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கனடாவில் அகதி நிலை கோரி விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 19,821. அதுவே, இந்த ஜனவரில் கனடாவில் அகதி நிலை கோரி விண்ணப்பித்தோர் எண்ணிக்கை…
-
பிலிப்பைன்ஸில் கொசுக்களை உயிருடனோ, கொன்றோ கொடுத்தால் சன்மானம்!
பிலிப்பைன்ஸில் கொசுக்களை உயிருடனோ, கொன்றோ கொடுத்தால் சன்மானம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. அங்கு 2025 ஆம் ஆண்டில் மட்டும் பிலிப்பைன்ஸில் 28 ஆயிரத்திற்கும் அதிகமானோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் டெங்கு பாதிப்பை குறைக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. டெங்கு வரவழைக்கும் கொசுக்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், டெங்கு கொசுக்களை ஒழிக்கவும் பிலிப்பைன்ஸ் அரசு புதிய…