Author: Menaka Mookandi
-
அரசு ஒதுக்கிய நிதியில் 67 வீதமானவை இந்தியாவின் நிதி!
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1350 ரூபாவிலிருந்து ஒரு ரூபாவை அதிகரித்து காட்டுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் சவால் விடுத்துள்ளார். வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ”1700 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுக்க நாம் நடவடிக்கையெடுத்த போது தேசிய மக்கள் சக்தியினர் எம்மை விமர்சித்தனர். 2138 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றனர். ஆனால், தற்போது 1700 ரூபாவை…
-
உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு அதிக வாடகை?
மாதிவலயில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு குறைந்த வாடகை வசூலிக்கப்படுவதால், அரசாங்கத்திற்கு ஆண்டுதோறும் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எம்.பி.க்களின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கான இன்னும் இரண்டாயிரம் ரூபாய் மட்டுமே மாதாந்திர கட்டணமாக அறவிடப்படுவதாக கூறப்படுகிறது. நாட்டின் தற்போதைய சூழ்நிலையுடன் ஒப்பிடும்போது எம்.பிக்களுக்கான வீட்டு வாடகைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் பல கட்சிகள் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளன. இழப்பை ஈடுகட்ட, இந்த வீடுகள் ஒவ்வொன்றிற்கும் குறைந்தது 15,000 அல்லது 20,000 ரூபாய் வசூலிக்கப்பட வேண்டும்…
-
இலங்கையில் என்கவுன்டர் ஆரம்பம்!
கொட்டாஞ்சேனை நேற்று இரவு துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர். நேற்று (21) இரவு, பொலிஸாருக்குச் சொந்தமான துப்பாக்கியைப் பறிக்க முயன்றபோது, மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதத்தைக் காட்ட அழைத்துச் செல்லப்பட்டபோது, அவரைச் சுட முயன்றபோது, அவரைத் தடுத்து நிறுத்தினார். சம்பவத்தில் ஒரு பொலிஸ் அதிகாரியும் காயமடைந்தார். சம்பவம் தொடர்பான உண்மைகளை தெளிவுபடுத்திய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் புத்திக மனதுங்க, “நேற்று…
-
திஸ்ச விகாரை காணி மனித புதைகுழியாக இருப்பதற்கான வாய்ப்புள்ளது..!
சமூக புதைகுழியினை மறைக்கும் முகமாக தையிட்டி விகாரை கட்டப்பட்டுள்ளதா என சந்தேகம் இருப்பதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார். அவரால் இன்று (21) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, படையினரை பொறுத்தவரையில் தமிழர் பிரதேசத்தில் நாட்டின் சட்டங்கள் அவர்களின் இரும்பு சப்பாத்தின் கீழ் என்பதற்கு இன்னொரு அடையாளமே அவர்களால் தையிட்டியில் தனியார் காணியில் கட்டப்பட்ட திஸ்ஸ…
-
நீதிமன்ற துப்பாக்கிச்சூட்டின் பின் காதலனுடன் இந்தியா தப்பிக்க திட்டம்..!
அண்மையில் புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொன்ற சூடு நடத்தியவரின் காதலி நேற்று (21) மஹரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மஹரகம, பமுனுவவில் உள்ள ஒரு மசாஜ் நிலையத்தில் பணிபுரியும் இந்தப் பெண், முக்கிய சந்தேக நபரான மஹரகம, தம்பஹேன வீதியில் வசிக்கும் முச்சக்கர வண்டி சாரதியான சமிந்து தில்ஷான் பியுமாங்க கண்டனாராச்சியுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கு மேலதிக விசாரணைக்காக கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக…
-
மற்றொரு துப்பாக்கிப் பிரயோக முயற்சி தோல்வியில் முடிந்தது.
நீர்கொழும்பு பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (21) பிற்பகல் மற்றொரு துப்பாக்கிப் பிரயோக முயற்சி தோல்வியடைந்துள்ளது. நீர்கொழும்பு பொலிஸ் பிரிவின் காமச்சோடய சந்தைப் பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றின் உரிமையாளரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற போது துப்பாக்கி இயங்காததால் தப்பிச் சென்றுள்ளனர். கணேமுல்ல சஞ்சீவவின் சீடரான கமாண்டோ சாலிந்த என்ற நபர், குறித்த கடையில் கப்பம் கேட்டதாகவும், பணம் கொடுக்காததால் இந்தத்…
-
பொதுமக்களுக்கு எச்சரிக்கை இஸ்ரேல் பேருந்துகளில் வெடித்த குண்டுகள்.
இஸ்ரேலின் டெல் அவிவின் தெற்கு புறநகர்ப் பகுதியில் மூன்று பேருந்துகள் வெடித்ததாக இஸ்ரேலிய பொலிசார் தெரிவித்தனர். எனினும் குண்டுவெடிப்பு நடந்த நேரத்தில் பேருந்துகள் நிறுத்தப்பட்டு காலியாக இருந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வெடிப்பு பயங்கரவாத தாக்குதல் என சந்தேகிக்கப்படுவதாக இஸ்ரேல் பொலிஸார் கூறியுள்ளதுடன், பேட் யாமில் பல்வேறு இடங்களில் பல பேருந்துகள் வெடித்ததாக பல தகவல்கள் வந்துள்ளன என்று காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையின்படி, சந்தேக நபர்களைத் தேடும்…
-
FBI பணிப்பாளராக இந்தியர் நியமிக்கப்பட்டுள்ளார்
அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான FBI பணிப்பாளராக காஷ் படேல், ஜனாதிபதி டொனால்ட் டிரம்பால் நியமிக்கப்பட்டுள்ளார். உளவு அமைப்புகளில் மிகவும் வலிமையானதாக அமெரிக்கப் புலனாய்வு அமைப்பு திகழ்கிறது. இந்த அமைப்பு பல நாடுகளை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறது. தற்போது இதன் பணிப்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை உத்தியோகப்பூர்வமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.
-
மீண்டும் கனடா பிரதமரை ஆளுநர் என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப்
கனடாவை மீண்டும் அமெரிக்காவின் 51ஆவது மாகாணம் என்று கூறி வம்புக்கிழுத்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப். கனடாவை அவ்வப்போது அமெரிக்காவின் 51ஆவது மாகாணம் என்று கூறி வம்புக்கிழுத்துவந்தார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப். இந்நிலையில், மீண்டும் கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணம் என்றும், கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவை கனடா ஆளுநர் என்றும் கூறியுள்ளார் ட்ரம்ப். இம்முறை சற்று சீரியஸாகவே அவர் இடுகை ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளதுபோல் தெரிகிறது. அதாவது, கேலி செய்வது போல் பேசாமல், சீரியஸாகவே கனடாவை அமெரிக்காவின்…
-
மிசிசாகாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் உயிரிழப்பு.
மிசிசாகாவில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவத்தில் படுகாயம் அடைந்த 20 வயது இளம்பெண் உயிரிழந்ததாக பீல் பிராந்திய போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் ஊடகமொன்றினால் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு பெண் சாலையை கடக்கும்போது, வேகமாக வந்த SUV வாகனம் ஒன்றினால் மோதப்பட்டு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தை மேற்கோண்ட நபர் வாகனத்துடன் தப்பிச் சென்றுள்ளார். விபத்துக்குள்ளான இளம்பெண் படுகாயங்களுடன் அவசர மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். சில காலம் சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண், சிகிச்சை…