Author: Menaka Mookandi

  • அமெரிக்காவில் தட்டம்மை நோய் பரவல் அதிகரித்துள்ளது.

    அமெரிக்காவில் தட்டம்மை நோய் பரவல் அதிகரித்துள்ளது.

    அமெரிக்காவின் மெக்சிகோ மற்றும் டெக்சாஸ் மாகாணங்களில் அம்மை நோய் பரவல் அதிகரித்துள்ளது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட தட்டம்மை நோயாளிகள் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்களில் பெரும்பாலானோர் 17 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தட்டம்மை தடுப்பூசியை எடுத்துக்கொள்ள மறுத்தமையே நோய் பரவுவதற்கு காரணமென அந்நாட்டு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

  • சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து

    சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து

    இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் நாகர்கர்னூல் மாவட்டத்தில் சுரங்கப்பாதை ஒன்று இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் சுரங்க பணியில் ஈடுபட்டிருந்த 30க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளே சிக்குண்டு இருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவ்விபத்து குறித்து தகவல் அறிந்த நாகர்கர்னூல் மாவட்டத்தின் தீயணைப்பு துறை அதிகாரிகள் மற்றும் மீட்பு படையினர் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்ரீசைலம் நீர்தேக்கத்திற்கு அருகில் உள்ள சுரங்கப்பாதையில் வழமைபோல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது சுரங்கத்தின் ஒரு பகுதி கூரை இடிந்து…

  • பேரழிவுக்கான அறிகுறியாக கரை ஒதுங்கிய அரிய வகை மீனினம்

    பேரழிவுக்கான அறிகுறியாக கரை ஒதுங்கிய அரிய வகை மீனினம்

    மெக்சிகோ கடல் பகுதியில் ‘டூம்ஸ் டே’ என்றழைக்கப்படும் அரிய வகை ‘ஓர்’ (Oar) மீன்கள் கரை ஒதுங்கியுள்ளமை மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் உள்ள பாஜா கலிபோர்னியா சுரின் எனும் ஆழமற்ற நீர்நிலைகளின் கரையில், ஆழ் கடலில் மட்டுமே காணப்படும் நீள ரிப்பன் போன்ற உடலமைப்புடன் ஒரேஞ் நிற துடுப்புகளுடன் கூடிய ‘டூம்ஸ் டே’ மீன்கள் என்றழைக்கப்படும் அரிய வகை ‘ஓர்’ மீன் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. மிகவும் அரிதாகவே காணப்படும் இந்த…

  • பிரான்ஸில் கத்திகுத்து தாக்குதல் ஒருவர் பலி

    பிரான்ஸில் கத்திகுத்து தாக்குதல் ஒருவர் பலி

    பிரான்ஸின் முல்ஹவுஸ் நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மூன்று பொலிஸார் காயமடைந்துள்ளனர். சம்பவம் இடம்பெற்ற இடத்தில் அல்ஜீரியாவை சேர்ந்த 37 வயது நபர் ஒருவர் காணப்பட்டார் என தெரிவித்துள்ள அதிகாரிகள் அவர் அல்லாகு அக்பர் என சத்தமிட்டார் என்பதை அடிப்படையாக வைத்து பயங்கரவாத குற்றம் என்ற அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அந்த நபர் இரண்டு பொலிஸாருக்கு கடும் காயங்களை ஏற்படுத்தினார்,தடுக்க முயன்ற 69 வயது போர்த்துக்கல் பிரஜையை குத்திக்கொன்றார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

  • அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழப்பு
  • கவலைக்கிடமான நிலையில் போப் பிரான்சிஸ்

    கவலைக்கிடமான நிலையில் போப் பிரான்சிஸ்

    கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸின் உடல்நிலை மிகவும் மோசடமடைந்துள்ளதாக வத்திகான் தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்டகால ஆஸ்துமா சுவாச நெருக்கடியைத் தொடர்ந்து போப் பிரான்சிஸ் தற்போது ஆபத்தான நிலையில் இருப்பதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 88 வயதான போப் பிரான்சிஸ் சிக்கலான நுரையீரல் தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இரத்த சோகையுடன் தொடர்புடைய ஒரு நிலையை சோதனைகள் சுட்டிக்காட்டிய பின்னர் அவருக்கு இரத்தமாற்றமும் அளிக்கப்பட்டதாக வத்திக்கான் உறுதிப்படுத்தியது. இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்த புதுப்பிப்பை…

  • யானை ரயில் மோதலுக்கு தீர்வை வழங்குங்கள் – சஜித் கோரிக்கை

    யானை ரயில் மோதலுக்கு தீர்வை வழங்குங்கள் – சஜித் கோரிக்கை

    உலகளாவிய ரீதியில் காட்டு யானைகள் ரயில்களில் மோதுவதால் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்க பல வெற்றிகரமான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்திய ரயில்வே கூட வனஜீவராசிகள் திணைக்களத்துடன் இணைந்து ‘கவக்’ என்ற வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. வெப்பநிலையை கண்கானிக்கும் கேமராக்கள் போன்றவைகளும் இங்கு பயன்படுத்தப்படுவதால் இதில் கவனம் செலுத்துங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும் கென்யா போன்ற நாடுகளில் தூண்களுக்கு…

  • அரசாங்கம் வாகன வரிகளைக் குறைக்கத் திட்டம்

    அரசாங்கம் வாகன வரிகளைக் குறைக்கத் திட்டம்

    சந்தையின் நடத்தையை அடிப்படையாகக் கொண்டு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரிகளைக் குறைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. பெப்ரவரி முதலாம் திகதி, தனியார் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சுமார் நான்கு ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த தற்காலிகத் தடையை அரசாங்கம் நீக்கியது. இருப்பினும், இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளினால் புதிய வாகனங்களின் விலைகள் உயர்ந்துள்ளதாக இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். உதாரணமாக, வேகன்-ஆர் போன்ற ஒரு சிறிய காரின் விலை சுமார் ஏழு மில்லியனிலிருந்து 10…

  • தமிழகத்திலிருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை ஆரம்பம்!

    தமிழகத்திலிருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை ஆரம்பம்!

    தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வரும் சிவகங்கை கப்பல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (22) நாகை துறைமுகத்திலிருந்து 83 பயணிகளுடன் காங்கேசன்துறைக்குப் புறப்பட்டுள்ளது. இந்தியா – இலங்கை இடையிலான இரு நாட்டு கலாசாரம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக 2003ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நாகையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு புதிய சர்வதேச பயணியர் கப்பல் போக்குவரத்து சேவை தொடக்கப்பட்டது. கப்பல் சேவையானது சுற்றுலாப் பயணிகள் மற்றும் வர்த்தகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் புயல், மழை, கடல் சீற்றம் உள்ளிட்ட காரணங்களால்…

  • புதிய முச்சக்கர வண்டியின் விலை 20 இலட்சம்!

    புதிய முச்சக்கர வண்டியின் விலை 20 இலட்சம்!

    இலங்கையில் விதிக்கப்பட்டிருந்த வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர், முச்சக்கர வண்டி இறக்குமதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இலங்கையில் பிரதான முச்சக்கர வண்டி விற்பனை நிறுவனமொன்று முச்சக்கர வண்டிகளுக்கான முன்கூட்டிய ஓடர்களை ஏற்றுக்கொள்ளும் வகையில் புதிய விளம்பரங்களை வெளியிட்டுள்ளது. அந்த நிறுவனம் அறிந்தவண்ணம், புதிய பஜாஜ் முச்சக்கர வண்டியின் விலை, பொருட்கள் மற்றும் சேவைகள் தவிர்த்து ரூ.16,90,678 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பெறுமதி வரி சேர்க்கப்பட்டு, ஒரு புதிய முச்சக்கர வண்டியின் விலை ரூ.19,95,225 எனத்…