இராணுவமும், தொல்லியல் திணைக்களமும் தமிழர்கள் நிலங்களை மிக வேகமாக ஆக்கிரமிக்கின்றன என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.குறித்த விடயத்தினை அவர் இன்று (06.04.2024) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மட்டக்களப்பு மயிலத்தமடு தமிழ் பண்ணையாளர்களின் மேய்ச்சல் நில மீட்புக்கான போராட்டம் 200 நாட்களை கடந்தும் தொடர்கின்றது.
அரசிடமிருந்து எத்தகைய உதவிகளையும் எதிர்பாராது தமது பொருளாதாரத்தை கட்டி எழுப்பிட சுய தொழிலில் ஈடுபடும் பண்ணையாளர்களின் பொருளாதாரத்திற்கு ஆதாரமான நிலத்தை ஆக்கிரமிக்கவும், கால்நடைகளை கொல்வதற்கு குண்டர்களுக்கு இடம் அளித்தும் தமிழ் பண்ணையாளர்களின் வாழ்வை அழித்து வீதியில் தள்ளி இருப்பது இன அழிப்பும் இனப்படுகொலையும் தொடர்கின்றது என்பதன் வெளிப்பாடு எனலாம்
Leave a Reply