ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி போன்ற அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்டவை ஏற்கெனவே ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதால் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும்் .தே.கவுடன் இணையலாமென, ஐ.தே.கவின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் மாவட்ட தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடனான சந்திப்பு தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு இவ்வாறு கூறினார்.
முன்னாள் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகார பதவிகளிலிருந்து நீக்கப்பட்ட தலைவர்கள், எதிர்காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்அரசாங்கத்தை நடத்த ஆதரவளிப்பார்களெனவும், அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
Leave a Reply