ஸ்ரீலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் அங்கீகாரத்தைப் பெறத் தவறிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.எ.சுமந்திரன், இலங்கை தமிழரசுக் கட்சின் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சியை கையகப்படுத்தும் எம்.எ.சுமந்திரனின் அடுத்த கட்ட நகர்வாக இந்த நியமனம் அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு, இன்று மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியிலுள்ள அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் காரியாலயத்தில் கூடியது.
மாவை சேனாதிராவின் மறைவின் பின்னர் முதல் முறையாக இடம்பெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கட்சியின் பதில் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
Leave a Reply