கனடாவில் இடம்பெறும் பாரிய மோசடி

கனடாவின் யோர்க் பிராந்தியத்தில் பாரியளவு மோசடி இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முதியவர்களை ஏமாற்றி பண மோசடிகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. யோர்க் பிராந்திய பொலிஸார் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

இந்த ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரையில் இந்த மோசடிகளினால் 19000 டொலர்கள் மோசடி செய்யப்பட்டுள்ளன.

தொலைபேசி வழியாகவே அதிகளவான மோசடிகள் இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேரப்பிள்ளைகள் போன்று பேசி தங்களுக்கு ஆபத்து எனக் கூறி முதியவர்கள் ஏமாற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.