சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீது தடை; டொனால்ட் டிரம்ப் கையெழுத்து

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீது தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றதில் இருந்து டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக எடுத்து வருகிறார்.

அமெரிக்காவின் புதிய உத்தரவு

அந்த வரிசையில் தான் தற்போது சர்வதேச நீதிமன்றத்திற்கு தடை விதிக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு பிடியாணை பிறப்பித்து இருப்பதன் மூலம் தனது அதிகாரத்தை நீதிமன்றம் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

முன்னதாக பெஞ்சமின் நேதன்யாகு அமெரிக்காவில் வைத்து அதிபர் டிரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

அமெரிக்காவின் புதிய உத்தரவு காரணமாக சர்வதேச குற்றவியல் நீதிமன்ற அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நீதிமன்றத்தின் விசாரணைகளுக்கு உதவியதாகக் கருதப்படும் எவருக்கும் எதிராக சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடைகள் பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் பெஞ்சமின் நேதன்யாகு அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வருகைக்குப் பிறகு இந்த தடை உத்தரவுகள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் அமெரிக்க அதிபரின் இந்த நடவடிக்கை வெளிப்படையாகவே அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான நட்புறவை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *