போதை மருந்து கடத்துவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் பியே பொலியேவ் தெரிவித்துள்ளார்.
40 மில்லி கிராம் எடைக்கும் அதிகமான பென்டனைல் என்னும் போதை மருந்து வைத்திருப்போருக்கு ஆயுள் தண்டனை விதிக்க ஏற்பாடு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொலைக் குற்றச் செயலுக்கு வழங்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
20 முதல் 40 மில்லி கிராம் எடையுடைய போதைப் பொருள் கடத்துவோருக்கு அதிகபட்சமாக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இந்த போதை மருந்தில் இரண்டு மில்லி கிராம் ஒருவரின் உயிரை பறிக்கப் போதுமானது எனவும் அவ்வளவு ஆபத்தானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Leave a Reply