- இலங்கையின் பிரபலமான புற்றுநோய் மருத்துவமனையான கொழும்பு – மஹரகம அபேக்ஷா மருத்துவமனைக்கான நன்கொடை கணக்கில் இருந்த 40 கோடி ரூபாய் நிதி மோசடி செய்யப்பட்ட சம்பவம் அம்பலமாகியுள்ளது.
அதன்படி, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் எந்தவொரு பயனுள்ள நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
இதற்கிடையில், தேசிய சுகாதார மேம்பாட்டு நிதியத்திற்கு நன்கொடையாக பெறப்பட்ட சுமார் 1 கோடியே 50 லட்சம் ரூபாய், நிதியத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகப் பயன்படுத்தப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நன்கொடையாளரிடமிருந்து பெறப்பட்ட 1 கோடி
குறித்த நன்கொடைகள் பல்வேறு திட்டங்கள் நான்கிற்காக 1998 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கொழும்பு ரிட்ஜ்வே ஆர்யா குழந்தைகள் மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்கு தேவையான பொருட்களை வாங்க நன்கொடையாளரிடமிருந்து பெறப்பட்ட 1 கோடி ரூபாய்க்கு அதிகமான பணம், தொடர்புடைய பணிகளைச் செய்வதற்காகப் பயன்படுத்தப்படவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a Reply