உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதியளவில் நடத்த முடியும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அவைத் தலைவர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இந்த சட்ட மூலம் தொடர்பில் எதிர்வரும் 18 மற்றும் 19ஆம் திகதிகளில் நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றின் சட்டவிளக்கத்தின் பின்னரும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி அளவில் தேர்தலை நடத்தக்கூடிய வழியுண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் பிமல் ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
Leave a Reply