எரிபொருளின் விலையில் இன்று மாற்றம்

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இவ்வாறு எரிபொருளின் விலையில் மாற்றங்கள் ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

இதேவேளை, கடந்த மாதம் மண்ணெண்ணெய்யின் விலையில் மாத்திரம் மாற்றம் ஏற்படுத்தப்பட்டிருந்த நிலையில், ஏனைய எரிபொருட்களின் விலையில் மாற்றம் மேற்கொள்ளாதிருப்பதற்கு இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் தீர்மானித்திருந்தது.

இதன்படி, கடந்த மாதம் மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை 188 ரூபாவிலிருந்து 183 ரூபாவாக குறைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், பெப்ரவரி மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் இன்றையதினம் அறிவிக்கப்படும் எதிர்பார்க்கப்படுகின்றது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *