இரத்மலானை பகுதியில் மதுபோதையில் பொலிஸ் ஜீப் ஒன்றை செலுத்தி, முச்சக்கர வண்டியுடன் மோதிய பின்னர் தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக குறித்த அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பரவிய காணொளியில், விபத்தில் சிக்கிய முச்சக்கர வண்டியும், அதனுடன் மோதி விபத்தை ஏற்படுத்திய பொலிஸ் ஜீப் வாகனமும் காணப்பட்டன. விபத்திற்குப் பிறகு, ஜீப் வாகனம் நிற்காமல் தொடர்ந்ததாகவும் காணொளியில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (28) இரத்மலானை பகுதியில் இடம்பெற்றது. அதே நாளில் கல்கிசை பொலிஸ் நிலையம் குறித்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி, ஜீப் வாகனத்தை ஓட்டிய பொலிஸ் கான்ஸ்டபிளை கைது செய்துள்ளது.
மேலும், விசாரணைகளில் அந்த பொலிஸ் அதிகாரி மதுபோதையில் வாகனம் செலுத்தியது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சந்தேக நபர் கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply