மாவைக்கு நேரில் அஞ்சலி செலுத்தவுள்ள ஜனாதிபதி அநுர : வெளியான தகவல்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மறைந்த மாவை சேனாதிராஜாவுக்கு (Mavai Senathirajah) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) நேரில் சென்று அஞ்சலி செலுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உடல் நலக்குறைவினால் நேற்றிரவு (29) உயிரிழந்த மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக மாவிட்டபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாளைய தினம் (31) யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) வருகை தரவுள்ள ஜனாதிபதி மாவை சேனாதிராஜாவின் வீடடுக்குச் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவார் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இதற்கான முன்னேற்பாடுகளில் பாதுகாப்பு வட்டாரங்கள் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை அநுரகுமார திசாநாயக்க மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பொதுமக்கள் சந்திப்பு என சில நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக நாளை யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார்.

ஜனாதிபதியின் வருகையின்போது போராட்டம் நடத்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், வட மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் உள்ளிட்ட 5 அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன.

இந்நிலையில், போராட்டம் நடத்துவதை தடை செய்யக் கோரி காவல்துறையினர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று (29) மனுத்தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.