நாட்டின் 77வது தேசிய சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கான ஒத்திகை நடவடிக்கைகள் தொடர்பாக கொழும்பு போக்குவரத்து பிரிவு விசேட அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அறிக்கையில், ஒத்திகைகள் நடைபெறும் நாட்களில் விசேட போக்குவரத்து திட்டம் அமல்படுத்தப்படுவதாகவும், பல வீதிகள் மூடப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒத்திகைகள் நடைபெறும் திகதிகள் மற்றும் நேரங்கள் பின்வருமாறு:
2025.01.29, காலை 06.00 மணி முதல் 12.00 மணி வரை
2025.01.30, காலை 06.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
2025.01.31, காலை 06.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
2025.02.01, 06.00 மணி முதல் 12.00 மணி வரை
2025.02.02, 06.00 மணி முதல் 12.00 மணி வரை
அந்தந்த நாட்களில் தற்காலிகமாக மூடப்படும் வீதிகள்:
கருவாத்தோட்டம் விஜேராம மாவத்தையிலிருந்து வித்யா மாவத்தை நோக்கி
கருவாத்தோட்டம் பௌத்தலோக மாவத்தையிலிருந்து மெட்லன்ட் பகுதிக்குள்
கருவாத்தோட்டம் பௌத்தலோக மாவத்தையிலிருந்து பிரேம கீர்த்தி டி அல்விஸ் மாவத்தை நோக்கி
கருவாத்தோட்டம் ஸ்டென்லி விஜேசுந்தர மாவத்தையிலிருந்து மன்றக் கல்லூரி வீதி நோக்கி
கருவாத்தோட்டம் சுதந்திர சுற்றுவட்டத்திலிருந்து சுதந்திர சதுக்கம் நோக்கி
கருவாத்தோட்டம் ஹோர்டன் பிளேஸ் மெட்லன்ட் கிரசன்ட் சந்திப்பிலிருந்து சுதந்திர சுற்றுவட்டத்திற்கு
கருவாத்தோட்டம் ஆர்.ஜி. சேனாநாயக்க மாவத்தையிலிருந்து மெட்லன்ட் கிரசன்ட் வழியாக சுதந்திர சுற்றுவட்டத்திற்கு
கருவாத்தோட்டம் தனிவழிப்பாதையில் இருந்து மெட்லன்ட் கிரசன்ட் நோக்கி இவை ஒத்திகை காலத்தில் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறிப்பிடப்பட்ட பகுதிகளில் உள்ள அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கான வாகனங்கள், ஒத்திகைப் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் செல்ல அனுமதிக்கப்படும் என கொழும்பு போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.
Leave a Reply