யுக்ரைனின் வடகிழக்கு பகுதியிலுள்ள உட்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா 161 ஆளில்லா விமானங்களை ஏவியதாக யுக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
குறித்த தாக்குதலால் பல உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏவுகணை தாக்குதலால் எரிவாயு உற்பத்தி மையங்கள் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு வலுசக்தி அமைச்சர் ஜெர்மன் கலுஷ்செங்கோ (German Galushchenko) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த நாட்களில் மாத்திரம் ரஷ்யா 122 தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும் யுக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
Leave a Reply