தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்த ஜீவன் தொண்டமான்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஜீவன் தொண்டமான் மரியாதை நிமித்தமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று புதன்கிழமை சந்தித்தார்.

இந்தச் சந்திப்பில் தமிழகம் மற்றும் மலையக மக்கள் இடையிலான தொடர்பு பற்றி இருவரும் கலந்துரையாடியுள்ளதுடன், எதிர்கால அரசியல் செயல்பாடுகள் குறித்தும் இருவரும் கலந்துரையாடினர்.