வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 25 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து குழுநிலை விவாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகி, மார்ச் மாதம் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

வரவுசெலவுத்திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் மார்ச் 21 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.