நாடளாவிய ரீதியிலான மின்தடைக்கு காரணம் வெளியானது

நாடு முழுவதும் கடந்த 09ஆம் திகதியன்று ஏற்பட்ட மின் தடை குறித்து நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, மின் பரிமாற்றத்தில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வு காரணமாக இந்த மின்தடை ஏற்பட்டதாக அறிக்கை கூறுகிறது.

எனவே, மீண்டும் மின்தடை ஏற்படுவதைத் தடுக்க குறுகிய மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.