ஹஷிஸ் போதைப்பொருளுடன் கனேடிய பெண் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 360 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹஷிஸ் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

36 வயதான கனேடிய பெண், கனடாவின் ரொறன்ரோவில் இருந்து சனிக்கிழமை (15) வந்தடைந்தார். அதன் பின்னர் அவர் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை சுங்கத்துறைக்கு கிடைத்த சர்வதேச புலனாய்வுத் தகவலைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் கொண்டு வந்த இரண்டு சூட்கேஸ்களுக்குள் பல படுக்கை விரிப்புகளில் 36.5 கிலோகிராம் “ஹாஷிஷ்” மறைத்து வைக்கப்பட்டிருந்ததை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இந்த மருந்துகள் வேறு நாட்டிற்கு மீண்டும் ஏற்றுமதி செய்யும் நோக்கத்தில் இருந்ததாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

மேலதிக விசாரணைகளுக்காக கனேடிய பெண்ணும் போதைப்பொருளும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்