கனடாவில் பெண்ணைத் தாக்கி வாகன கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தேடும் பொலிஸார்

கனடாவில் பெண் ஒருவரை தாக்கி கார் கொள்ளையில் ஈடுபட்ட இருவரை போலீசார தேடி வருகின்றனர்.

பிரம்டன் பகுதியில் பெண் ஒருவர் பயணம் செய்த வாகனத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆயுத முனையில் இந்த பெண் அச்சுறுத்தப்பட்டதாகவும் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பேர்சிடிஸ் பென்ஸ் ரக வாகனமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கொள்ளை சம்பவத்தின் போது குறித்த பெண் சிறு காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் வழங்குமாறு போலீசார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.