இலங்கையில் செயல்படுத்தப்பட உள்ள இரண்டு காற்றாலை மற்றும் மின் பரிமாற்றத் திட்டங்களிலிருந்து மரியாதையுடன் விலக முடிவு செய்துள்ளதாக அதானி கிரீன் எனர்ஜியின் பணிப்பாளர்கள் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் இலங்கைக்கான அதன் அர்ப்பணிப்பு அப்படியே உள்ளது என்றும், இலங்கை அரசாங்கத்தின் அபிலாஷைகளின் அடிப்படையில் எதிர்கால ஒத்துழைப்புக்குத் திறந்திருப்பதாகவும் அதானி குழுமம் மேலும் கூறுகிறது.
உள்ளூர் ஆய்வுகள் மற்றும் விமர்சனங்களைத் தொடர்ந்து, இந்தியாவின் சுற்றுப்புறத்தில் முதலீட்டுத் திட்டங்களிலிருந்து அதானி குழுமம் குறிப்பிடத்தக்க அளவில் பின்வாங்குவதை இந்நடவடிக்கை குறிக்கிறது.
அதானி நிறுவனத்தின் விலகல் இலங்கையின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு கிடைத்த ஒரு வெற்றியாகும், அவர் செப்டம்பர் 2024 இல் நாட்டின் உயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு “ஊழல்” திட்டத்தை இரத்து செய்வதாக சபதம் செய்தார், இருப்பினும் அவரது அரசாங்கம் பின்னர் அதை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்ததாக இந்தியாவின் த ஹிந்து இணையத்தளம் தனது செய்தி அறிக்கயிடலில் தெரிவித்துள்ளது.சுற்றுச்சூழல் நீதி மையம் உள்ளிட்ட 5 தரப்பினர் இந்த மனுக்களை சமர்ப்பித்து, உத்தேச காற்றாலை மின் நிலையம் நிர்மாணிப்பதால், சுற்றுச்சூழல் பல்லுயிர் பெருக்கத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இந்த மின் நிலையத்தால் புலம்பெயர்ந்த பறவைகளின் உயிருக்கு கடுமையான ஆபத்து ஏற்படும் என உயர் நீதிமன்றில் மனு ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Leave a Reply