பாராளுமன்றத்தில் அமைச்சர் சந்திரசேகரன் அவர்களைப் பாரத்து… ‘கப்பல்’ என்றான சொல்லாடல்களைப் பாவித்து பேசிய வார்த்தைகளுக்காக…மக்களால் தெரிவு செய்யப்பட் பாராளுமன்ற உறுப்பினர் தாமாக பதவி விலகவேண்டும் அன்றேல் மக்களால் பதவி விலக வைக்கப்பட வேண்டும்.
இது, அதிலும் சிறப்பாக அவரின் தெரிவிற்கு காரணமான விருப்பு வாக்குளை வழங்கியவர்களால்.இதனை ஒரு பொதுவெளி அறை கூவலாக முன் வைக்கின்றேன்.பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சர் மலையக மக்கள் மத்தியில் இருந்து மிகவும் விளிம்பு நிலையில் இருந்து தான் நம்பும் சித்தாந்தத்தின் அடிப்படையில் சமூகசேவை செயற்பாட்டாளராகி இன்று மரியாதைக்குரிய அமைச்சர் என்றாக தனது சேவைகளை விஸ்தரித்து இருக்கின்றார்.
அவரைப் பார்த்து முழு மலையக மக்களையும் இழிவுபடுத்தும் பாகுபடுத்திப் பார்க்கும் அவமானகரமான வார்த்தை பிரயோகங்களை பாவித்து பாராளுமன்னத்தில் பேசிய ஒருவர் எவ்வாறு பாராளுமன்ற உறுப்பினராக தொடர முடியும்.தொடர அனுமத்திக்க முடியும்.
சட்டங்கள் செய்யத் தயங்கும் விடயங்களை மக்கள் எழுச்ச்சி மூலம் நாம் செய்தாக வேண்டும். தேர்தலுக்கு முன்பே இவரின் செயற்பாடுகளை நன்கு உணர்ந்த பலரும் இவரைப் பற்றி ‘மன பிறழ்வு’ உள்ளவர் என்றான வார்த்தைப் பிரயோகங்ளைப் பாவித்து விமர்சனம் செய்ததை முழுமையாக உள்வாங்காது இவரை வாக்குகளால் தெரிவு செய்தது தவறு.
இவர் முன்வைத்த விடயங்களில் சிறப்பாக மருத்துவத்துறையின் நிர்வாகம் என்றாக இருந்த விடயங்கள் சரியானதாக புலப்பட்டாலும் அதனை முன்வைத்தவர் தற்போது பாராளுமன்றத்தில் முன்வைத்த வார்த்தைகள் ஒரு நீண்ட வரலாற்றின் தொடர்ச்சிதான். அது தமிழ் குறும் தேசியம், சிங்கள பெரும் தேசியத்தின் தொடர்ச்சிதான்200 வருட உழைப்பால் இலங்கை நாட்டை உருவாக்குவதற்கான செயற்பாடுகளில் வலுக்கட்டாயமாக அடிமைகள் போல் திணிக்கப்பட்டவர்கள் மீது அவர்களின் அடையாளங்கள் மீது வைகப்பட்ட மிகவும் கீழ்தரமான வார்த்தைகள் அந்த பாராளுமன்ற உறுப்பினருடையது.இதனைக் கடந்த காலங்களிலும் தற்போதும் அவர்கள் எழுந்து வர தடைபோடும் விலங்குகளாக சிலர் செயற்பட்டு வருவதன் தொடர்ச்சிதான் என்று கடந்து போக முடியாது.இவாறு செயற்பட்டவர்களால் அந்த மக்களின் மனங்களில் எற்பட்ட வலிகளை வடுக்களை அகற்ற நாம் எல்லோரும் 200 வருடங்களாக போராடித்தான் வருகின்றோம். இந் நிலையில் புதிதாக பொதுவெளியில் இந்த அநாகரிகமான அசிங்கமான வீச்சுப் பேச்சு கண்டனத்திற்குரியது எற்புமையது அல்ல.வருந்தல்கள் மன்னிப்புகள் என்றாக தனி நபராக அர்சுனாவின் பதில்கள் ஏற்றுக் கொள்ள முடியாது.மிக அண்மையில் பெண்களின் சிறு நீரை மையப்படுத்திய பேச்சின் போதே பெண்களுக்கும் சமூகத்தின் பொதுக் கருத்திற்கும் ஆதரவாக இவரின் பதவி விலகலை கோரி நாம் இன்னும் வீச்சாக செயற்பட்டிருக்க வேண்டும் எனவே அவர் தற்போது அவர் பதவி விலவேண்டும். இதன் பின்பு பொது மன்னிப்பும் கேட்டாக வேண்டும்அவருக்கு கணக்கு காட்டப்படாது உணர்ச்சிகளின் அடிப்படையில் நிதி உதவி வழங்கும் அனைவரும் இதனை நிறுத்தி உங்கள் எதிர்பையும் தெரிவித்தாக வேண்டும்.இந்த பாராளுமன்ற உறுப்பினரின் பெயரை உச்சரிக்கவே நா கூசும் மன நிலையில் இருந்து இதனை எழுதுகின்றேன்இதனை தமிழ் மக்கள், தமிழ் பேசும் மக்கள். இலங்கை மக்கள் என்றாக அனைவரும் வலியுறுத்திச் செயற்பட்டாக வேண்டும்.
Leave a Reply