வங்கிக் கொள்ளையுடன் தொடர்புடைய நபரை வலைவீசி தேடும் போலீசார்!

கனடாவில் வங்கி கொள்ளை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேக நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மெரிகொரப்ட் பகுதியில் ஆயுத முனையில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட நபரே இவ்வாறு தேடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வங்கிக் கொள்ளையை மேற்கொண்ட சந்தேக நபர் கால்நடையாகவே தப்பிச் சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த கொள்ளை சம்பவத்தில் எவ்வளவு தொகை பணம் கொள்ளையிடப்பட்டது என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

 

சந்தேக நபர் சுமார் 40 வயது மதிக்கத்தக்கவர் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் போலீசாருக்கு அறிவிக்குமாறு யோர்க் பிராந்திய போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.