அரச சின்னங்களை பயன்படுத்தி மோசடி சம்பவங்கள் – கணினி பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை!

அரச நிறுவனங்களின் சின்னங்களை பயன்படுத்தி வேலைவாய்ப்பு காணப்படுவதாக உண்மைக்கு புறம்பான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்புவதன் மூலம் தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கும் மோசடி இடம்பெறுவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த சில நாட்களில் இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவின் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக்க தமுனுபொல தெரிவித்துள்ளார்.

மேலும் பல அரச நிறுவனங்களின் சின்னங்களை பயன்படுத்தி தொழில் வெற்றிடம் காணப்படுவதாக பல விளம்பரங்கள் சமூக ஊடகங்களில் பரப்படுகின்றன.

இத்தகைய செயற்பாடுகள் மூலம் மக்களை ஏமாற்றி அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் உள்ளிட்ட முக்கிய தரவுகளை சேகரிக்கும் மோசடி இடம்பெறுகிறது.

இதன்படி, அடையாள அட்டை பிரதிகள் கடவுச்சீட்டு பிரதிகள் மற்றும் விமான பயண சீட்டுக்களின் பிரதிகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இடம்பெறுகிறது.

இவ் விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அவ்வாறான மோசடியாளர்களிடம் தனிப்பட்ட தகவல்களை பகிர்வதை தவிர்க்குமாறு இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவின் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக்க தமுனுபொல தெரிவித்துள்ளார்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *