இன்று இலங்கைக்கு அழைத்து வரப்படும் முக்கிய குற்றவாளிகள்

நாட்டில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்கள் இன்று (07) நாட்டிற்கு அழைத்து வரப்பட உள்ளனர்.

டுபாயில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று இந்நாட்டுக்கு அழைத்து வரவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை பொலிஸினால் மேற்கொள்ளப்பட்ட அறிவித்தலின் அடிப்படையில், சர்வதேச பொலிஸார் குறித்த சந்தேக நபர்களுக்கு சிவப்பு அறிக்கையை வௌியிட்டிருந்தனர்.

குறித்த மூன்று சந்தேக நபர்களும் இன்று காலை UL-226 ரக விமானத்தில் கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட உள்ளனர்.