சுவீடனில் துப்பாக்கிச் சூடு – 11 பேர் உயிரிழப்பு

சுவீடனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு ஊடங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமிலிருந்து மேற்கே சுமார் 200 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஓரேப்ரோ நகரில் வயது வந்தோருக்கான கல்வி நிறுவனம் ஒன்று உள்ளது.

கேம்பஸ் ரிஸ்பெர்க்ஸ்கா என்று அழைக்கப்படும் இந்தப் கல்வி நிறுவனம், 20 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கிறது.

இந்த கல்வி நிறுவனத்தில் தங்கி படித்து வந்த மாணவர்கள் பெரும்பாலானோர் பரீட்சை முடிந்ததை அடுத்து தங்களின் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

எனினும் ஒரு சில மாணவர்கள் கல்வி நிறுவனத்தில் தங்கியிருந்தனர்.

இந்த நிலையில் இந்த கல்வி நிறுவனத்திற்கு வந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.

இதில் 11 பேர் பலியானார்கள். அதை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த நபர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் யார்? இந்த சம்பவத்தின் பின்னணி என்ன? என்பது குறித்து அந்நாட்டு பொலிசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *