வவுனியாவில் போதைப்பொருளுடன் வயோதிப பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக பூவரசங்குளம் பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மடுக்கந்தை விசேட அதிரடிப்படையினரினால் செட்டிகுளம் பகுதியில் வைத்து 51 வயதுடைய வயோதிப பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடம் இருந்து 1740 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் 2380 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணையினை பூவரசங்குளம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
விசாரணைகளின் பின் குறித்த பெண்ணை நீதிமன்றில் முற்படுத்த பூவரசங்குளம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Leave a Reply