இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) இன்று தனது 100வது ரொக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ஜிஎஸ்எல்வி-எப்15 (GSLV-F15) ரொக்கெட்டின் மூலம் என்.வி.எஸ்-02 (NVS-02) என்ற உயர் தொழில்நுட்ப செயற்கைக்கோள் புவியிலிருந்து விண்ணில் அனுப்பப்பட்டது.
இந்த செயற்கைக்கோள் இன்று 29 ம் திகதி காலை 6.23 மணிக்கு ஆந்திரப்பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இது தரை, கடல் மற்றும் வான்வெளி போக்குவரத்தை கண்காணிக்கவும், பேரிடர்களை துல்லியமாக கணிக்கவும் உதவவுள்ளது.
Leave a Reply